பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை ராசி

அம்மா, சாத்துக்குடி வேணுமா?" என்று கத் தின்ை பழக் கூடைக்காரன். உள்ளே கைவேலையாக இருந்த வீட்டுக்கார அம்மாள் வருவதற்குள் குடு குடு வென்று இரண்டு வயசுக் குழந்தை சோமு ஓடிவந்தான். வாசலில் வந்து, 'வா, வா' என்று தன் மழலைச் சொல் லால் கூப்பிட்டான் பழக்காரனே. ஒரு மாச காலமாக அவனுக்குச் சாத்துக்குடி மிகவும் பழக்கமாகிவிட்டது. அவனுடைய பேச்சு, உணவு, ருசி எல்லாம் இப்போது சாத்துக்குடியில் கிற்கின்றன. கட்டி ஆரம்பமாகியிருக்கிற தென்று டாக்டர் சொல்லிவிட்டார். ஆகார விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று உத்தரவு வேறு போட்டிருக்கிருர், 'தக்காளிச் சாறும் சாத்துக் குடியும் கொடுங்கள். சாத்துக்குடி எவ்வளவுக் கெவ்வளவு கொடுக்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது' என்று பழக் கடைக்காரனுக்கு விளம்பர உத்தியோகஸ்த ராகப் பேசினர் அவர்.

ராமமூர்த்தி முதலியாரின் முதல் குழந்தை - இப்போ தைக்கு ஒரே குழந்தை - தங்கவேலன். அவர் எதோ கம் பெனியில் அக்கெளண்டெண்டு - கணக்குப்பிள்ளை. ஒரு நாளேப் போல் காரியாலயத்திலிருந்து வரும்போது சாத்துக் குடி ஆரஞ்சுப் பழம் வாங்கிவர அவரால் முடிவதில்லை. கம்பெனி வேலையென்ருல் சொந்தவீட்டு வேலையைவிட அதிகம் அவருக்கு, கம்பெனி மூடும் நேரம் ஐந்தரை மணி என்று பேர். அவருக்கு அந்தக் கணக்கு இல்லை; ஆறு மணி. ஏழு மணி, எட்டு மணி என்று வேலை செய்வார். வீடு