பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வளைச் செட்டி திரும்புகிற நேரம் திட்டமாக இன்னதென்று சொல்ல முடியாது. இந்த விலையில் தினந்தோறும் பழம் வாங்கிவர முடியுமா? ஐந்தரை மணி ஆறு மணிக்குக் கம்பெனியை விட்டுப் புறப்பட்டால் பழக்கடைக்கு வந்து, வேண்டிய பழத்தை வாங்கி வரலாம். அந்த கியதிதான் அவருக்கு இல்லையே! அதோடுகூடி மற்ருெரு விஷயம் இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் பெங்களுருக்குப் போகவேண்டி நேரும்; கம்பெனி வேலையாகத்தான். அங்கே கம்பெனி யின் கிளே ஒன்று உண்டு, அதில் கணக்கு வழக்குகளேச் சரிப்படுத்த முதலியாருக்கு அழைப்பு வரும். சேர்ந்தாற் போல் நாலு நாள் பெங்களுரில் தங்கிவிடுவார். அப்போது யார் பழம் வாங்கி வருவார்கள்? . அவர் குடியிருந்தது திருவல்லிக்கேணி. கிடைக்கிற பழத்தை வாங்கிக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லா மற் போயிற்று. இப்போதுதான் தினந்தோறும் வீதியி லேயே கூடைக்காரர்கள் பழம் கொண்டுவந்து விற்கிருள் களே. என்றைக்காவது முதலியார் பட்டணத்திலிருந்து பழம் வாங்கி வருவார்; மற்ற நாட்களிலெல்லாம் வீதியில் வரும் பழமும், திருவல்லிக்கேணிக் கடைத்தெருவில் விற்கும் பழமுக்தான் சோமுவுக்குக் கிடைத்தன. கடைசியில் ஒரு கியதி ஏற்பட்டது. பழக் கடைக்கு. முதலியார் போகவில்லை. அவர் வீட்டைப் பழம் தேடி வந்தது. கணக்காகக் குறிப்பிட்ட காலத்தில் தினங்தோ றும் மூன்று பழங்களே அந்த வீட்டில் கொண்டுவந்து போட்டுவிடுவான் கந்தன். பணம் உடனே கிடைக் கிறதோ, ஒரு மாசம் கழித்துக் கிடைக்கிறதோ, அதைப் பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. முதல் நாள் அவன் அந்தத் தெருவில் விற்றுக் கொண்டு போனபோதுதான் குழந்தை சோமு ஓடிப்