பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&弯》怒 131 போய் அவனைக் கூப்பிட்டான். அதுவரையில் அந்தத் தெருவுக்கு வராதவன் கந்தன். எந்த எந்த வீட்டில் பழம் வாங்குவார்கள் என்ற கிகா அவனுக்கு ஏற்பட கியாயம் இல்லையே! கட்டி விழுந்த குழந்தைகள், ஜூரம் வந்த வர்கள், எலும்புருக்கி வியாதிக்காரர்கள், பணக்கார உத்தி யோகஸ்தர்கள்-இவர்கள் வாழும் இடங்களில்தான் அவனுக்குக் கிராக்கி அதிகம். அந்த இடங்களே அவன் தெரிந்துகொண்டு வருகிருன். மற்றத் தெருக் களில் அநுபவத்தால் சில இடங்களேத் தெரிந்துகொண் டிருக்கிருன். . இன்று புதிதாக இந்தத் தெருவுக்கு வந்ததில் சிறிது கிதானமாகத்தான் வியாபாரம் ஆகும் என்பது அவனுக் குத் தெரியும். காலேயில் பழக்கூடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன், என்னவோ தோன்றிற்று, இக் தத் தெருவில் நுழைந்துவிட்டான். இன்னும் பேரமே ஆகவில்லை. முதல் முதலில் ஒரு குழந்தை கூப்பிட்டது அவனுக்கு நல்ல சகுனமாகப் பட்டது. பல இடங்களில் பழகித் தெரிந்துகொண்ட அவனுக்கு குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடனே கட்டி விழுந்திருக்கிற தென்று தெரிந்துவிட்டது. வைத்தியர்களுக்குத்தான இந்த விஷ யம் தெரியும்? கந்தனுக்கும் தெரியும். எத்தனை குழந்தைகளுக்கு அவன் பழம் கொடுத்திருக்கிருன்! தங்கவேலன்-அந்தக் குழந்தைதான்-அழைத்த வுடன் கந்தன் அங்கே சென்று தன் கூடையை இறக்கி வைத்தான். 'அம்மா !” என்று அழைத்தான். வீட் டுக்கார அம்மாள் இன்னும் வரவில்லை. அதற்குள் குழந்தை நெடுநாள் பழக்கப்பட்டவன்போல் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு உள்ளே ஒடிஞன். ' அம்மா, பயம் " என்று சொல்லியபடியே தன் தாயை அணுகினன்.