பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 7. "இப்போது ஞாபகம் வந்ததாக்கும்' என்ருள் அவர் மனேவி. "ஆமாம்; அந்த வரனுக்கு வேறு இடத்தில் நிச்சய மாகி விட்டதென்று தகவல் வந்ததாம். இதைச் சந்திர மெளலி எனக்குச் சொல்லும்பொது அவன் முகத்தில் ஈயாடவில்லை. அவன்தான் என்ன செய்வான்? எத் தனையோதான் சிரமப்பட்டான்." "வேளேயும் போதும் ஒத்துக்கொள்ளவில்லை" என்று அம்மாள் தீர்ப்புக் கூறினள். 'ரங்கம் எங்கே?' என்று கேட்டார். 'உள்ளேதான் இருக்கிருள். அவள் துக்கத்தைக் கிளறிவிட ஏதாவது ஒன்று வந்து சேர்கிறது.” - 'என்ன, என்ன?’ என்று வேகமாகக் கேட்டார் அவர். அம்மாள் வளையல் உடைந்த விஷயத்தைச் சொன் ள்ை. அவர் அதைக் கேட்டார். பெருமூச்சு விட்டார். 'அம்பிகே தாயே! என்றைக்கு உன் கடாகrம் கிடைக்கப் போகிறதம்மா?” என்று கைந்த குரலில் அவர் லோகமாதாவினிடம் முறையிட்டுக்கொண்டார். உள்ளே இருந்த ரங்கத்தின் காதில் இந்தச் சம்பா ஷனே விழுந்துகொண்டே இருந்தது. அப்பா அவளுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணிவிட வேண்டுமென்று படுகிற பாடு கொஞ்சமா, நஞ்சமா? அவளுக்கு அது சம்மதமே இல்லை. அவளுடைய அத்தான் என்று அவள் கையைத் தொட்டானே, அன்றே அவள் தன்னையும் அறி யாமல் அவனுக்கு மனைவியாகி விட்டாள். கையைத் தொட்டு வளை போட்டானே அன்று முதலே அவனுக்கு அவள் தர்ம பத்தினி என்ற பந்தம் ஏற்பட்டுவிட்டது. இது அவள் எண்ணுகிற எண்ணம். -