பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வளைச் செட்டி ஏழு வயசிலேயே அப்படி ஒர் எண்ணம் வருமா? வராது. பின்னலே அவளுக்கு அறிவு வந்தது முதல் தன் நாயகன் நாராயணன்தான் என்ற உறுதியான எண்ணம் ஏற்பட்டுவிட்டது. சின்ன வயசில் அவளுேடு பழகியது மாத்திரம் இந்த எண்ணத்துக்குக் காரணம் அல்ல. அம்மா, அப்பா, அத்தை, சொந்தக்காரர் யாவரும் அந்தக் காலம் முதற்கொண்டே அவர்களே அகமுடையான் பெண்டாட்டி யாக முடிச்சுப் போட்டுப் பேசினர்களே, அதுகூட முக் கியமான காரணம் அல்ல. அவன் தன் கையைத் தொட்டு வளைபோட்டானே, அந்த ஒன்றுதான் அவனுக்கும் தனக் கும் யாராலும் பிரிக்கமுடியாத உறவை ஏற்படுத்திவிட்ட தென்று எண்ணினுள். அப்போது அதிகமாக அதை எண்ணவில்லை. நாளாக ஆக அது அவள் உள்ளத்தில் ஊன்றி உருப் பெற்று மெருகு பெற்று இன்ப கினேவாக இருந்தது. இப்போதோ அது விரதமாக, தவமாக, பிர திக்கினேயாக வை.ரமோடிக் கிடக்கிறது. இப்போது பழைய நாடகத்தின் மூன்ருவது காட்சி அவள் உள்ளத்தில் ஓடியது. - + சாயங்காலம் நாராயணன் வந்தான்; ஏண்டி ரங் கம், கான் போட்ட வளையல் எங்கே? கழற்றிவிட் டாயா?" என்ருன். 'இல்லை; அம்மா உடைத்துவிட்டாள்.' "உடைத்துவிட்டாளா!' அவனுக்கு அதைக் கேட் கும்போது முகம் சுண்டிப் போயிற்று. 'கழற்றி வைக்கப்படாதோ? காவேரி அம்மன் வளையை உடைக்கலாமோ? இவ்வளவு தெரிந்த மாமிக்கு இது தெரியவில்லையே!” என்று அவன் சாஸ்திரம் பேசி ன்ை. ‘.. ‘...