பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 9 "நான் வேண்டாமென்றுதான் சொன்னேன், அவள் பல்லேக் கடித்துக்கொண்டு உடைத்துவிட்டாள்.' 'அப்படியானல் அம்மாவுக்கு என்னிடத்தில் பிரிய மில்லை என்றுதானே அர்த்தம்? நான் எதற்காக இந்த வீட்டுக்கு வரவேண்டும்?” இதைக் கேட்டுக்கொண்டே வந்துவிட்டாள் ரங்கத் தின் தாய். 'என்னடா, அவளைப்போய் மிரட்டுகிருய்?” என்று அவள் கேட்டாள். 'காவேரியம்மன் பிரசாதத்தை உடைக்கலாமா, மாமி' என்று அவளேயே கேரில் கேட்டான் நாரா யணன். r "ஆமாம். காவேரியம்மனே நீ கண்டுவிட்டாயோ இல்லையோ! எவள் போட்டாளோ, எந்த எச்சிலில் கிடங் ததோ, அதைக் கொண்டுவந்து ரொம்ப அருமையாய் இவள் கையில் போட்டுவிட்டாய்! போதாக் குறைக்கு எண்ணி மூன்று மூன்ருகப் போட்டாயே! உனக்குத் தெரிந்த லட்சணம் இதுதான? அவள் பேச்சில் காரம் ஏறியது. . - "இங்கே பார் மாமி; நான் விளையாட்டுக்காகப் போட் டேன். நீ அதை உடைத்துவிட்டு என்னேக் கோபித்துக் கொள்கிருய். நான் ஒன்றும் தப்புச் செய்யவில்லை. கான் போட்ட வளையைத்தான் உடைத்துவிட்டாயே. இனி மேல் எதற்கு வீண் சண்டை?” என்று சொல்லி அவன் விடுவிடு வென்று தன் வீட்டுக்குப் போய்விட்டான். 'இந்த அம்மா என்ன, இதைப் பெரிசுபடுத்தி ராட் சசியைப் போலக் கத்துகிருள்? என்று ரங்கம் நினைத் தாள். அதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? பத்மநாப ஐயர் - ரங்கத்தின் தகப்பனர் -செயலாக இருந்த காலம் அது. ஜோஸியம் பார்ப்பதில் கெட்டிக்