பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வளைச் செட்டி காரர் என்ற பேர் சுற்றுவட்டாரத்தில் பல ஊர்களுக்கு எட்டியிருந்தது. தினமும் பொழுது விடிந்தால் அஞ்சாறு பேர் சோதிடம் பார்க்க வந்துவிடுவார்கள். நாள் கட்சத் திரம் பார்க்க, ஜாதகம் எழுத, விவாகப் பொருத்தம் பார்க்க, தேர்ஷத்துக்குப் பரிகாரம் தெரிந்துகொள்ள-இப் படியாகப் பல வகையில் ஜனங்கள் வருவார்கள். அவருக்கும் நல்ல காலம் இருந்தது. சம்பாதித்தார். தம்முடைய ஒரே தங்கைக்கு அவர் கல்யாணம் பண்ணி வைத்தார். அவளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அதற்கு மேல் அதிருஷ்டம் இல்லை. கணவனே இழந்தாள். அவ ளேயும் அவள் பிள்ளையையும் தம்முடைய ஊருக்கே அழைத்துக்கொண்டு வந்தார். தனியே ஒரு வீட்டில் குடியிருக்கச் செய்தார். - புத்திர தோஷத்துக்கு எத்தனையோ பரிகாரங்களே அவர் மற்றவர்களுக்குச் சொன்னர். ஆனல் அவர் விஷ யத்தில் ஒன்றும் பலிக்கவில்லே. காலேந்து குழந்தைகள் ஆணும் பெண்ணுமாகப் பிறந்து இறந்து போயின. கடை சியில் ரங்கநாயகி பிறந்தாள். ரங்கநாயகியோடு அவர் மனேவி மருத்துவச்சிக்கு வேலை கொடுப்பதை கிறுத்திக் கொண்டாள் பத்மகாபையர் தம் பெண்ணே நாராயணனுக்கே கொடுத்து இரண்டு குடும்பங்களேயும் ஒன்று படுத்திவிட வேண்டுமென்று எண்ணினர். அவர் மன்ேவி கொஞ்சம் வாய்த் தடுக்கு. ஆகையால்தான் அவர் தம் தங்கையைத் தனியே ஒரு வீட்டில் இருக்கும்படி ஏற்பாடு செய்திருந் தார். தம்மோடு இருக்கும்படி செய்தால் ஏதாவது சச் சரவு நேர்ந்து, அதல்ை பிற்காலத்தில் தாம் நினைத்தபடி அந்த இரண்டு குழந்தைகளையும் தம்பதிகளாக்குவதற்குத் தடை வரக்கூடாதென்பது அவர் அபிப்பிராயம். ★