பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 11 'அம்மா, ரங்கம்" என்று அழைத்தார் பத்மகா பையர். ரங்கம் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு கூடத் துக்கு வந்தாள். "ஏன் அம்மா வருத்தப்படுகிருய்? அம்பிகை. கடாட்சம் சீக்கிரம் கிடைக்கும் அம்மா' என்று ஆறுத: லாகப் பேசினர். 'இப்போதெல்லாம் மிலிடெரியில் ரொம்பப் பேர் சேர்ந்திருக்கிரு.ர்களாமே?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் ரங்கம். "ஆமாம். சந்திரமெளலியின் பிள்ளை கூட மிலிடெரி யில் சேர்ந்திருக்கிருன்.' 'அங்கே தேடினல் கிடைக்கலாமோ?” என்று. கேட்டாள். 'தேடுகிறதா?...” என்று இழுத்தார் அவர். "அத்தான் ஒருகால் அதில் சேர்ந்திருப்பாரோ!' அதற்குள் அவள் தாய் குறுக்கிட்டாள். 'இத்தனே நாள் வராதவன் இனிமேல்தான் வரப்போகிருனே? அவன் இருக்கிருனே...' - 'போதும், கிறுத்து' என்ருர் பத்மநாப ஐயர். "ஐயோ அம்மா, நீ முன்பு வளையலை உடைத்தது போதுமே! என் இருதயத்தையும் உடைக்கவேனுமா?" என்று மனசுக்குள்ளே ரங்கம் கடிந்துகொண்டாள். "சரி, இலையைப் போடு” என்ருர் ஐயர். அவர் சாப்பிட உட்கார்ந்தார். ரங்கம் மறுபடியும் உள்ளே புகுந்துகொண்டாள். விட்ட நாடகத்தின் நான்காவது காட்சி தொடங்கியது. k. - -