பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வளைச் செட்டி நாராயணன் அன்று முதல் அதிகமாக அந்த வீட் டுக்கு வருவதில்லே. பத்மகாபையரிடம் அவசியமான காரியம் இருந்தால் வந்து போவான். ஆனல் ரங்கம் மாத் திரம் அத்தை வீட்டுக்குப் போய் வருவாள். அத்தை பின்னிப் பூச் சூட்டுவாள். நாராயணன் ஏதாவது கதை சொல்வான். தன் அம்மாவைக் கண்டால் நாராயணனுக் குப் பிடிக்கவில்லை என்பதை ரங்கம் ஒருவாறு உணர்ந்து கொண்டாள். அம்மா பேசுவது அவளுக்கே சில சமயம் பிடிக்கவில்லையே! அந்தப் பாழும் தெய்வத்துக்குக் கொஞ்சங் கூடக் கருணே இல்லை. திடீரென்று ஒரு நாள் அவள் அத்தை யை உலகத்திலிருந்து கொண்டு போய் விட்டது. அப் போது நாராயணன் காலாவது பாரம் படித்துக் கொண் டிருந்தான். தம் தங்கை காலமாகவே நாராயணனைத் தம் வீட்டுக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டார் பத்ம நாபையர். உள்ளூரில் ஹைஸ்கூல் படிப்பு கன்ருக இல்லை யென்று பன்னிரண்டு மைலில் இருந்த நகரத்தில் அவனே அனுப்பிப் படிக்க வைத்தார். அவன் அங்கே கன்ருகப் படித்து வந்தான். - இங்கே பத்மகாபையர் வரும்படி இறங்கி வந்தது. தம் மருமகன் படிப்புக்கு அவன் கிலத்து வரும்படியோடு தாமும் கொஞ்சம் போட்டுச் செலவு செய்து வந்தார். வர வர அதற்கு வசதி இல்லாமற் போயிற்று. லீவு நாளில் நாராயணன் வந்திருந்தபோது அவனுடன் யோசித்து அவன் கிலத்தை விற்க முடிவு செய்தார். அதை வைத்துக் கொண்டு அவன் எஸ். எஸ்.எல். ஸி. வரையில் படிப்பை கிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்தார்; படிப்பு முடிந்தவுடன் கல்யாணத்தையும் கையோடே முடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தார்.