பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 13: எல்லாம் ஒழுங்காகவே கடந்து வந்தது. ஒய்வு காட் களில் நாராயணன் நகரத்திலேயே இருந்தான். படிப்பிலே ஊன்றியிருக்கிருன் என்று பத்மநாப ஐயர் வினைத்தார். அது ஒரளவு உண்மையே. ஆனாலும் தம் மனேவியின் கடு கடுப்பே அவனே ஊருக்கு வராமற் செய்தது என்பதை அவர் அப்போது தெளிவாக உணரவில்லை. ரங்கம் தன் அத்தானின் உடம்பு வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் பார்த்துப் பூரித்துப்போனுள். அவ ளும் வளர்ந்து வந்தாள். அவளுக்கு இப்போது வயசு பன் னிரண்டு. சின்னப் பெண்ணுக இருந்தாலும் அவளுக்குக் குடும்ப நிலை கன்ருகத் தெரிந்திருந்தது. பரீட்சை எழுதிவிட்டு நாராயணன் ஊருக்கு வக் தான். மேலே என்ன செய்வதென்று யோசித்தான். பரீட் சையில் தேறுவதைப் பற்றி அவனுக்குச் சந்தேகமே. இல்லை. மேலே காலேஜில் படிக்க வசதி வேண்டுமே! நிலம் விற்ற பணத்தில் கொஞ்சந்தான் எஞ்சியிருந்தது. அதை. வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அன்றைக்குப் பரீட்சையின் முடிவு வந்தது. பத்திரி கையில் அவனுடைய எண் வரவில்லை. நாராயணனுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. அவன் தன் வகுப்பில் முதல் வகை விளங்கினவன். அவன் தேர்ச்சி பெரு விட்டால் வகுப்புப் பிள்ளைகள் அத்தனே பேரும் தோற்றிருக்க வேண்டும். இதில் ஏதோ குது இருக்க வேண்டும் என்று. கினைத்தான். அவன் மாமாவிடம், 'நான் நகரம் போய் என்ன விஷயம் என்று விசாரித்து வருகிறேன். எப்படி இது நேர்ந்தது என்று எனக்கே தெரியவில்லை' என்ருன். அவரும் அதில் ஏதோ குது இருக்கிற தென்று எண்ணினர்.