பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வளைச் செட்டி ஆனல் அவர் மனேவி அப்படி எண்ணவில்லை. மரு மான் கெட்டிக்காரன் கெட்டிக்காரன் என்று பேரிகை யடித்ததெல்லாம் இப்பொழுது தெரிகிறதா? ஜமீன் தார் வீட்டுப் பிள்ளையைப் போல ஹோட்டலில் சாப்பிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந் திருப்பான். இங்கே இவர் பாவம், அவன் வீவுக்குக்கூட வராமல் படிக்கிறதாக ம ேன ரா ஜ் ய ம் பண்ணிக் கொண் டிருந்தார். இப்போது வண்டவாள மெல்லாம் வெளியாகி விட்டது” என்று விமரிசனம் செய்தாள். நாராயணன் காதில் கேட்கும்படியாகவே பேசினள். அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் கெஞ்சில் கூரிய அம்பு போலத் தைத்தது. அப்பாவை இழந்து அம்மாவையும் இழந்து கைந்து போன அவன் இளைய உள்ளத்துக்கு அது தாங்கவில்லை. "நான் என் தலைவிதியைத் துணையாகக் கொண்டு புறப்படுகிறேன். என்னேத் தேட வேண்டாம்” என்று ஒரு நறுக்கு எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டு விட்டான். அன்று இரவு அவன் வீட்டுக்கு வரவில்லை. மறு காளும் வரவில்லை. மறுநாள் பத்திரிகையில் அவன் எண் தனியாக வந்தது. முதல் நாள் இதழில் விட்டுப் போயிற் றென்று கண்டு, தனியே வந்த எண்களில் அவன் எண்ணும் இருந்தது. - 'அடி படுபாவி! அந்தக் குழந்தையை வீட்டை விட்டு ஒட்டி விட்டாயேடி!' என்று அதைக் கண்டவுடன் கத் தினர் பத்மநாப ஐயர். அவருக்கு முதல் நாள் கடந்தது தெரிந்திருந்தது. போதாக்குறைக்கு இரண்டு நாள் கழித்து நகரத்திலிருந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஒரு கடிதம் நாராயணனுக்கு எழுதியிருந்தார். அவன் வகுப் பில் முதல்வகைத் தேர்ச்சி பெற்றதாகத் தெரிகிற