பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 15 தென்றும், அதற்காகப் பரிசொன்று கிடைக்கு மென்றும் எழுதித் தம் சந்தோஷத்தைத் தெரிவித்திருந்தார். பத்ம காபையர் இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் ருத்திர மூர்த் தியே ஆகிவிட்டார். - அதுமுதல் ஒரு வாரத்துக்கு அவர் தம் மனைவியைத் தண்டித்ததற்கும் கண்டித்ததற்கும் கணக்கில்லே, வழக் கில்லை. அவரும் அப்படி இருப்பாரா என்று ரங்கம்கூட ஆச்சரியப்பட்டாள். இப்போது கினேத்தாலும் உடம்பு நடுங்குகிறதே. ஆனலும் அவ்வளவும் அம்மாவுக்கு வேண்டும். இப் போது கூட அவள் கெட்ட எண்ணம் போகவில்லையே! நாராயணன் போன இடமே தெரியவில்லை. பத்ம நாபையர் எங்கெங்கோ சொல்லியனுப்பினர். ஒரு செய்தி யும் கிடைக்கவில்லை. அவருடைய பாக்கிய சக்கரமும் மந்தமாகிவிட்டது. அன்ருடம் வயிறு வளர்ப்பதே கஷ்ட மாகிவிட்டது. நாராயணன் வருவான் வருவான் என்று பார்த்தார்; வரவில்லை. ஒரு வருஷம் ஆயிற்று; இரண்டு வருஷங்கள் ஆயின; மூன்று நான்கு வருஷங்களும் மறைந்தன. ரங்கம் மனப் பருவம் அடைந்த பெண்ணுகி விட்டாள். அவளே அவ லுக்கே கல்யாணம் செய்து வைக்கவேண்டு மென்றிருந்த அவர் எண்ணத்தில்தான் மண் விழுந்து விட்டதே! இனி மேல் அவன் எங்கே வரப்போகிருன்? வேறு நல்ல வரன் பார்க்கலாமென்ருல் அதற்குப் பணம் இல்லை. எப்படியா வது ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டு மென்று பரவாய்ப் பரந்தார். . . . - அவருக்குத் தம் மகளின் அபிப்பிராயம் தெரியும். பாவம்! பேதைப் பெண் அவன் மறுபடியும் வரப் போகிருன் என்று காத்துக் கொண்டிருக்கிருள். இத்தனை