பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை ராசி 135° கடித்த பழம் உனக்கு உபயோகப்படாது. அதற்குத் தானே நான் விலை முக்கியமாகத் தரவேண்டும்?' என் ருள் அம்மாள். - ' அது சரிதான் அம்மணி. குழந்தை தூக்கிக் கொண்டு போனதை நான் தடுக்கவில்லை என்று சொன்னீர் களே; அதற்காகச் சொன்னேன். உங்கள் மனசு எனக்கு நன்ருகத் தெரிகிறதே! ஏழைபாழைகளுக்குக் காலணுக் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் ஜாக்கிரதையாகத்தான் வியாபாரம் செய்ய வேணும்.' கந்தன் விநயமான பேச்சினல் தையல்நாயகி அம்மாளே வசப்படுத்திவிட்டான். அன்று அந்த அம்மாள் சேர்ந்தாற். போல் ஆறு பழம் வாங்கினுள். முதல் முதல் நல்ல பேரக் தான். அதோடு கிற்கவில்லை. அன்று பல தெருக்களுக்கு அலேயவேண்டிய அவசியமே இல்லாமல் நாலு இடங்களில் கறுக்கென்று பேரம் படிந்து கூடை முழுவதும் காலியாகி விட்டது. . மறுநாள் கந்தன் வந்தான். திண்ணையில் கூடையை இறக்கி வைத்துவிட்டு, “ அம்மா !” என்று கூப்பிட் டான். "நேற்றுத்தானே பழம் வாங்கினேன்? மறு படியும் இன்றைக்கு எதற்கு' என்று உள்ள்ே இருந்து வந்த அம்மாள் கேட்டாள். 'நீங்கள் இன்று பழம் வாங்கவேண்டாம். நான் இங்கே பழம் விற்க வரவில்லை. உங்கள் குழந்தைக்கு ஒரு பழம் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்தேன். "அதென்ன அதிசயம்? இனமாகவா, விலக்கா?" என்று கேட்டாள் அம்மாள். 'உங்களைப் பார்த்தால் மகாலட்சுமியைப் போல் இருக்கிறது. உள்ளதைச் சொல்லிவிடுகிறேன். நீங்கள்