பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 வளைச் செட்டி எப்படி கினேத்துக் கொண்டாலும் சரி. நான் கேற்றுத தான் முதல் முதலாக இந்தத் தெருவுக்கு வந்தேன். அது -வும் இந்த வீட்டில்தான் முதல் முதல் கூடையை இறக்கி வைத்தேன். உங்கள் குழந்தை ஓடிவந்து கை வைத்தது. பேரம் ஆகாமல் இருக்கிற கூடையில் யாராவது கை வைத் தால் கூடைக்காரர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனல் உங்கள் குழந்தை கை தங்கக் கை. ராசியுள்ள கை. கேற்று அலேச்சல் இல்லாமல் கூடைப் பழத்தையும் விற்று விட்டேன். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. தப்பாக வினைத்துக்கொள்ள வேண்டாம். குழந்தையைக் கூப்பிடுங்கள். அவன் தன் கையாலேயே ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளட்டும்" என்ருன் பழக்கூடைக்காரன். தன் குழந்தையைப் பாராட்டினல் எந்தத் தாய் வயிறு தான் குளிராது: "மெச்சி உனே ஊரார் புகழ்ந்தால், மேனி சிலிர்க்குதடி' என்று பாரதியார் பாடவில்லையா? தையல்நாயகி உள்ளே ஒடிஞள். தங்கவேலனே எடுத்துக் கொண்டு வந்தாள். போக்கிரி ! உனக்கு இனம் கிடைக்கிறது. எடுத்துக்கொள். ஒரு பழத்தை அந்தக் கூடையிலிருந்து எடுத்துக்கொள்” என்ருள். குழந்தை இரண்டு கையையும் கொண்டுபோஞன். "இக்தா : ஒரே ஒரு பழம்' என்று எச்சரித்தாள் தாய். 'இரண்டு எடுத்துக் கொண்டால்தான் என்ன அம்மா? எனக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது ” என்று வஞ்சகம் இல்லாத சந்தோஷம் முகத்தில் ஒளியைப் புகுத்தப் பேசினன் கங்தன். - தங்கவேலன் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டான்: 'எனக்கு அம்மா?' என்ருன். 'உனக்குத்தான் கண்ணு. உன் தங்கக் கைக்குச் சம்மானம்' என்று கைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்