பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை ராசி 135 தாய். "இதோ பார் அப்பா ! இந்தப் பழத்துக்கு விலை வாங்கிக்கொள். சும்மா தரவேண்டாம். நீ குழந்தைக்கு ஆசையோடு தரவேண்டுமென்று வந்தாயே; அதுவே பெரிது” என்று சொன்னுள். அவன் வாங்கமாட்டேன் என்ருன். கடைசியில் பெயருக்காக அரையணக் கொடுப்பதென்று சமாதானத்துக்கு வந்தார்கள். இப்படி ஆரம்பித்த வியாபாரம் நெருங்கிய அன்பைக் குழந்தைக்கும் கந்தனுக்குமிடையே உண்டாக்கிவிட்டது. தினந்தோறும் அவன் வருகிறதென்று வழக்கமாகிவிட்ட படியால், ஒவ்வொரு நாளும் இரண்டிரண்டு பழமாக வாங்கும் கியதி ஏற்பட்டது. அதோடு தங்கவேலகை எடுத்துக்கொள்ளும் பழம் ஒன்று; அதற்கு மாத்திரம் அரையளு விலை, , - 2 கந்தன் பழம் கொடுக்க ஆரம்பித்துச் சில மாதங்கள் ஆகிவிட்டன. தங்கவேலனுக்கு இப்போது கட்டி கரைந்து விட்டது. கங்தன் இப்போதெல்லாம் பழம் விற்கும் வியா பாரியாக அந்த வீட்டில் பழகவில்லை. குடும்பத்தைச் சேர்ந்தவனேப் போலவே பழகினன். அந்த வீட்டுக்கு வேண்டிய சில்லறை வேலை ஏதாவது இருந்தால்கூடச் செய்வான். அவன் வராத நாட்களில் அவன் மனைவி பழம் கொண்டுவந்து கொடுப்பாள். சூரியன் ஒரு நாள் வராம்ல் இருந்தாலும் இருக்கலாம்; பழம் அந்த வீட்டுக்கு வராமல் இராது. - 'குழந்தைக்கு இவ்வளவு சீக்கிரம் கட்டி கரைந்தது. சாமி புண்ணியந்தான் அம்மா. ஒவ்வொருத்தர் வீட்டில் மாசக் கணக்கிலே குழந்தைகள் கஷ்டப்படும். நல்ல மருந்தாகக் கொடுத்திருக்கிறீர்கள்" என்பான் கந்தன்.