பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - வளைச் செட்டி 'மருந்திலே ஒன்றும் இல்லை கந்தா. எல்லாம் உன் பழத்தின் மகிமை அப்பா. குழந்தைக்கு அந்தப் பழம் இல்லாவிட்டால் எப்படியாகியிருக்குமோ? கடவுள்தான் உன்னேக் கொண்டுவந்து விட்டார்' என்பாள் தையல் நாயகி அம்மாள். 'என் பழம் என்ன செய்யும் அம்மா? நல்லவர்களுக்கு ஒரு குறைவும் வராது அம்மா என் ராஜா தங்கக் கை இருக்கும்போது யாருக்கு என்ன குறைச்சல்?...அம்மா, ஒரு விஷயம் சொன்னுளா அவள்?' யார்? உன் பெண்டாட்டியா?" "ஆம். இந்த வெள்ளிக்கிழமை அவளுக்கு ஒரு தங்கச் சங்கிலி கிடைக்கப் போகிறது. எல்லாம் இந்தத் தங்கக் கையின் ராசி' என்று குழந்தையின் கையை முத்தமிட் டான் கந்தன். "இந்த வருசம் குழந்தைக்குப் பிறந்த நாள் எப் போது அம்மா வருகிறது?" - "அடுத்த மாசம்." 'கிழமை, தேதி தெரியுமா? அன்றைக்குச் சாமிக்கு அர்ச்சனே பண்ணுவீர்களா?” "உனக்கு இருக்கும் அக்கறை அவருக்கு இல்லையே! சதா வேலை வேலை வேலைதான். அவருக்கு இதைப் பற்றிய ஞாபகமே இல்லை. ஏதாவது செய்யவேணும். குழந்தை கல்லபடியாகப் பிழைத்து எழுந்திருக்கிறது. பருப்புப் பாயசம் வைத்துச் சாப்பிடவேணும்.' கந்தன் குழந்தையின் பிறந்தநாளேக் குறிப்பாகக் கேட் டான். எதற்குத் தெரியுமா? அன்று அவன் தங்கவேல ஆணுக்கு ஏதாவது பரிசளிக்க எண்ணினன். என்ன வாங்கித் தருவதென்று யோசனை பண்ணிப் பார்த்தான். தன் மனேவியோடு கலந்து ஆலோசித்தான். துணிமணிகளாக