பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை ராசி 12? இருந்தால் கிழிந்துவிடும். ஆகையால், ஏதாவது வெள்ளிப் பாத்திரம் வாங்கித் தரலாமென்று தீர்மானித்தான். 'ஏன் அம்மா, குழந்தைக்குப் பிறந்த நாள் ஆனல் தெரிந்தவர்கள் ஏதாவது கொடுக்கிறது உண்டா?” என்று மெதுவாகக் கேட்டான் கந்தன். - "ஆமாம்! முதல் ஆண்டு கிறைவுக்கே கவனிக்கிற வர்களேக் காணுேம். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் யார் கொடுக்கிருர்களோ!' என்று அசுவாரசியமாகச் சொன் ஞள் தையல்நாயகி அம்மாள். 'அதற்கு இல்லை அம்மா. யாராவது குழந்தையின் மேல் பிரியப்பட்டு வாங்கித் தரக்கூடாதா?” - "பேஷாக வாங்கித் தரலாம். ஆனல் யார் தரு கிருர்கள்?" - - 'என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? இந்தக் குழந்தையிடம் எவ்வளவோ பேர் பிரியமாக இருக்கிருர் களே! அன்றைக்கு ஊரிலிருந்து தங்கவேலன் அத்தை வந்தார்கள்: இன்னும் ஒரு நாள் யாரோ வந்தார்கள். அவர்களெல்லாம் ஒன்றும் வாங்கித் தருவதில்லையா?” "கன்ருக வாங்கித் தருவார்கள் இருக்கிறதைச் சுருட்டிக்கொண்டு போகாமல் இருந்தால் போதாதா? நீ என்னவோ கதை பேசுகிருய். அதெல்லாம் இந்தக் காலத்தில் எங்கே அப்பா நடக்கிறது? குழந்தையிடம் உண்மையான விசுவாசம் உனக்குத்தான் இருக்கிறது. t ஏதாவது வாங்கிக் கொடு; இரண்டு கைகளேயும் நீட்டிப் பெற்றுக் கொள்கிறேன்.' . - "நான் தரமாட்டேன?" என்று சிரித்துக்கொண்டே கந்தன் போய்விட்டான். தையல்நாயகி அம்மாள் பேச்சுவாக்கில் ஏதோ சொன்னுளே ஒழிய, அவள் மனசில் யோசித்துச் சொன்