பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வளைச் செட்டி னது அல்லது அது. ஆனல் கந்தன் அதை உண்மையாக்கி விட்டான். குழந்தையின் பிறந்த நாளன்று அவன் ஒரு வெள்ளிக்கிண்ணத்தைத் துாக்கிக் கொண்டுவந்து குழந்தை யின் கையில் கொடுத்தபோது தையல்நாயகி அம்மாள் பிர மித்துப் போனள். என்ன கந்தா இது? எதற்கு?

  • அன்றைக்கு ஒரு நாள் சொன்னிர்களே! ஏதாவது வாங்கிக் கொடு, பெற்றுக்கொள்கிறேன் என்றீர்களே!”

" என்ன, பைத்தியமாக இருக்கிருயே! நான் சொன்னதற்காகவா இதை வாங்கிய்ை?" ' இல்லை அம்மா. நான் வாங்கித் தந்தால் பெற்றுக் கொள்வீர்களோ, மாட்டீர்களோ என்று பயமாக இருந் தது. உங்கள் வார்த்தையால் அந்தப் பயம் போய்த் துணிவு பிறந்ததம்மா." - " நீ கலிகாலத்து மனிதனுகத் தோன்றவில்லையே, கந்தா! குழங்தைக்குப் பழம் கொடுப்பது போதா தென்று இத்தனே ரூபாய் செலவழித்து இதை வாங்கிக் கொண்டுவந்து கொடுக்கிருயே! நீ அன்ருடம் பழம் விற்று ஜீவனம் செய்கிறவன். உன்னிடம் இதை நான் வாங்கிக்கொள்ளலாமா ?” 'இது என்னுடையது அல்ல அம்மா. குழந்தை யுடையதுதான். உண்மையைச் சொல்கிறேன். குழந் தைக்குத் தினமும் ஒரு பழம் கொடுக்கிறேனே. அதற்கு அரையன நீங்கள் தருகிறீர்கள். அதை வாங்க எனக்கு மனசில்லே. நீங்களோ கட்டாயப்படுத்தினர்கள். ஒரு யோசனே தோன்றியது. அந்த அரையனுவைத் தினங் தோறும் உண்டியலில் போட்டு வைத்தேன். பத்து மாசத்தில் பத்து ரூபாய் சேர்ந்துவிட்டது. அந்தப் பணத் துக்குத்தான் இதை வாங்கினேன்.”