பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை சாசி 129 தையல்நாயகியின் உள்ளம் அவனுடைய அன்பின் உயர்வை எண்ணி உருகியது. அவன் யார்? அவள் யார்? குழந்தைக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் ஏழைக் கூடைக்காரன்! அவன் அன்பு அணு அணுவாய்ச் சேர்ந்து மலையாகிவிட்டதே! அந்த வெள்ளிக் கிண்ணம் என்ன? பத்து மாதங்களாக அவன் கொடுத்த பழங்கள் பெருங் குவியலாக அவள் அகக்கண்முன் தோற்றின. அவன் அன்பு-அதற்கு உருவம் என்ன? மலேயா? கடலா? அல்லது வானமேதான? இல்லே இல்லை; பெரியவர்கள் அதன் உருவத்தைச் சொல்லியிருக்கிருர்கள். அதன் எல்லை, அதன் அளவு, அதன் ஆழம், அதன் விரிவு அளவிட ஒண் ணுதவை. மனிதனிடத்தில் அது தோன்றலாம். ஆனல் அந்த மனிதேைல எல்லே காணமுடியாதது அது. அதற்கு ஒன்றைத்தான் அளவாகக் கூறலாம். அளவாகவா? அன்று அன்று உவமையாகக் கூறலாம். உவமைகூட அல்ல; அதுவே அது. அன்புதான் பரம்பொருள். பரம்பொருள் தான் அன்பு. தையல்நாயகியின் கண்ணில் நீர் துளித்தது. அவள் என்ன பேசுவாள்? வாங்கிக்கொண்டேன்' என்று சொல் வாளா? கூடாது" என்பாளா? 'பாவம், ஏழையின் பணம்' என்று இரங்குவாளா? 'அன்பின் அடை யாளம்' என்று போற்றுவாளா?-ஒன்றுமே தோன்ருமல் கின்ருள். - குழந்தை தங்கவேலன் கிண்ணமும் கையுமாக சின் முன்; அம்மாவையும் கந்தனையும் மாறி மாறிப் பார்த் படியே நின் முன். - தையல்நாயகியின் மோனம் கலந்தது. "கந்தா, இன்று நீயும் உன் பெண்டாட்டியும் இங்கேதான் சாப்பிடவேண் டும். தந்த கிண்ணத்தை நான் அளவில்லாத சக் 9