பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ஆண்டவன் சென்னையில் ஒரு வீட்டில் இரண்டு பேர் குடியிருந் தார்கள். முன்கட்டில் இருந்தவர் கோயம்புத்தூர் ஜில்லாக் காரர்; முத்துசாமி முதலியார் என்று பேர். பின் கட்டில் வசித்தவர் திருநெல்வேலி ஜில்லாக்காரர்; சங்கர முதலியா ரென்பது அவர் பெயர். இரண்டு பேரும் இரண்டு கம்பெனி களில் வேலை பார்த்தார்கள். ஒருவருக்கு நாறு ரூபாய் சம்பளம்; மற்ருெருவருக்கு நாற்றிருபது ரூபாய் சம்பளம். இரண்டு பேருடைய குடும்பங்களும் அன்னியோன் னியமாகவே பழகிவந்தன. ஏதாவது பண்டம் வேண்டு மானுல் ஒரு குடும்பத்தினர் மற்றவர்களிடத்தில் வாங்கிக் கொள்வதும் திருப்பிக் கொடுப்பதுமாக அவர்கள் பரஸ் பரம் உபகாரம் செய்துகொண்டார்கள். காலையிலே எழுங் தால் ரோடி உணவுண்டு கம்பெனிக்கு ஒடுவதே வழக்க, மாகிப்போன ஆண் பிள்ளைகள் அதிகமாகக் கலந்து பேசிப் பழக நேரம் இல்லாவிட்டாலும், பெண்மணிகள் பழகிச் குலாவிக் கூடி வாழ்ந்தனர். - ஒரு காள் முத்துசாமி முதலியார் பின்கட்டுக்கார ராகிய சங்கர முதலியாரிடம் வந்தார். 'ஐயா, வெள்ளி ரூபாயாக ஒற்றை ரூபாய் கிடைக்குமா?" என்று கேட்டார். "சுத்த வெள்ளி எங்கே கிடைக்கப்போகிறது? எல் லாம் விக்கலாகவே வந்துவிட்டதே' என்ருர் அவர். அதற்குக் கேட்கவில்லை. என்னிடம் எல்லாம் ஒரு ரூபாய் கோட்டாகவே இருக்கின்றன. ஒற்றை ரூபாய் நாணயம் வேண்டும்" என்று விளக்கினர் முன்கட்டுக் காரர்.