பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வளைச் செட்டி 'ஏது, நாணயத்தின் மேலே நாட்டம்?" என்று சிரித் துக்கொண்டே கேட்டார் திருநெல்வேலி ஜில்லாக்காரர். 'குழந்தை ராஜூவுக்கு உடம்பு சரியில்லை. ராத்திரி யெல்லாம் உளறுகிருன். ஆண்டவனுக்கு முடிந்துபோடலா மென்று பெண்டுகள் சொல்கிருர்கள். அதற்கு ரூபாயாகக் கிடைக்கவில்லை' என்ருர் கோயம்புத்துரார். 'அடடா விஷயம் எனக்குத் தெரியாதே! குழக் தைக்கு ஐ ஈரமா வந்திருக்கிறது? அதுதான் இரண்டு நாட் களாக அவனைக் கண்ணிலே காணவில்லை. டாக்டரும் பார்க்கிருர் அல்லவா?” - பார்க்காமல் என்ன? அதோடுகூட ஆண்டவன் மேலும் பாரத்தைப் போடுவது நல்லதுதானே?" "அது மிகவும் நல்ல காரியங்தான். இந்தாருங்கள் ரூபாய்” என்று தம் பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து tட்டினர் சங்கர முதலியார். சந்தோஷம். இந்தாருங்கள் கோட்டு' என்று முத்து சாமி முதலியார் நீட்டினர். "இதென்ன பிரமாதம்: நான் கொடுத்ததாகத்தான் இருக்கட்டுமே” என்று சொல்லியபடியே அந்த நோட்டை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டார் சங்கர முதலியார். உடனே, "அது சரி, செங்திலாண்டவன் கண் கண்ட தெய் வம்! அங்கே சந்தனக் காப்புச் செய்வதாகப் பிரார்த்தனே செய்துகொள்ளுங்கள்' என்று யோசனை சொன்னர், கோயம்புத்துாரார், "எங்கள் குல தெய்வம் பழகி ஆண்டவர். அவருக்குத்தான் இதை முடிந்து போடப் போகிறேன். எங்கள் வீட்டு வழக்கம் அது” என்று சொல்லிவிட்டுப் போககத் தொடங்கினர். - அவர் நண்பர் அவரை இடைமறித்து, இங்கே பாருங்கள்; எங்கள் வீட்டில் எங்கள் பாட்டையாவுக்குப்