பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ஆண்டவன் 133 பாட்டையா காலங் தொடங்கிச் செந்திலாண்டவ லுக்குப் பிரார்த்தனே செய்கிருேம். உங்களுக்குச் சொல்கிறேன்; ஆண்டவன் கிருபையால் எங்கள் வீட்டில் கடுமையான வியாதி வந்து படுத்தவர்களே இல்லை. ஏதாவது தலைவலி, ஜுரம் என்று அறிகுறி தோன்றினல் போதும்; திருச் செந்துாருக்கு எழுதி இல விபூதி தருவிக்க வேண்டியது தான்; அப்புறம் வியாதி இங்கே ஏன் வருகிறது?" ' அதெல்லாம் சரி; எங்கள் பரம்பரை வழக்கம் பழகி யாண்டவருக்குப் பிரார்த்தனை செய்து கொள்வது. அதை எப்படி மாற்றுவது?" "சரி, உங்கள் இஷ்டம்” என்று கடுமையாகச் சொல்லி உள்ளே போய்விட்டார் சங்கர முதலியார். - ★ குழந்தைக்கு ஜூரம் வந்திருந்தது. பழகியாண்ட வனைப் பிரார்த்தித்துக் கொண்டு முடிந்து போட்டார்கள். கல்ல டாக்டர் ஒருவரும் வந்து பார்த்தார். ஜூரம் முத லில் லேசாக இருந்தது, பிறகு கடுமையாகிவிட்டது. கடை சியில் அது டைபாயிட் ஜூரம் என்று டாக்டர் சொன் னர். மூன்று வாரம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மருந்தைக் காட்டிலும், கூட இருந்து கவனித்துக் கொள்வதுதான் முக்கியம்" என்று அவர் எச்சரிக்கை செய்தார். - பழகியாண்டவனே! தோன் குழந்தையைக் காப் பாற்ற வேண்டும்" என்று வீட்டில் யாவரும் வேண்டிக் கொண்டார்கள். . - இந்த நிலையில் பின்கட்டுக்காரர் தூர இருந்தபடியே டாக்டர் வருவதையும் போவதையும் கவனித்து வந்தார். நெருங்கிவந்து பேசவில்லை. டாக்டரிடம் மாத்திரம், *எப்படி இருக்கிறது?" என்று கேட்பார். அப்போதே