பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வளைச் செட்டி சொன்னேன். இந்தப் பாவி மனிதன் கேட்டான? செந்தி லாண்டவன் விபூதி வருவித்து நாலு நாள் உள்ளுக்குக் கொடுத்தால் இது இவ்வளவுக்கு வந்திருக்குமா? திருச் செக்துரரின் பெருமை இந்தக் கொங்கர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? ஊமையைப் பேச வைத்த ஸ்தலம் என்பதை இவர்கள் கேட்டிருப்பார்களா? மனிதனுக்கு நல்லது பொல்லாதது தெரியவேண்டும். இல்லாவிட்டால் தெரிந்தவர்கள் சொல்வதையாவது கேட்க வேண்டும். மலேமேலிருக்கிற சாமியெல்லாம் வந்து காப்பாற்றப் போகிறதாக்கும்' என்று முனு முணுப்பார். சில சமயங்களில், இந்தப் பழகியாண்டவன் காப் பாற்றுவதை நான் பார்க்கத்தானே போகிறேன்? எல்லாம் அரோ ஹராத்தான்!' என்று கூடச் சொல்வார். அவர் பராமுகமாக இருப்பதை முத்துசாமி முதலி யார் கவனிக்கவில்லை. அவருக்குக் குழந்தையைப் பற்றிய கவலேயே பெரிதாக இருந்தது. கம்பெனிக்கு லீவு எழு திப் போட்டுவிட்டு அல்லும் பகலும் குழந்தையைக் கவ னித்துக்கொண்டே இருந்தார். சங்கர முதலியார் அவர் கவலையை உணரவில்லை. "என்னிடம் ஒரு யோசனை கேட்கக்கூடாது? நானே பணம் அனுப்பி ஒரு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்வேனே!” என்று மனசுக்குள்ளே பொருமினர். முத்துசாமி முதலியார், "ஆண்டவா, பழகி மலே யானே தோனப்பா காப்பாற்ற வேண்டும்" என்று கசிந்து பிரார்த்திப்பார்; அந்த ஒலி இவர் காதில் விழும் போதே, "ஆமாம்; காப்பாற்றப் போகிருன் ஆண்டி! ஆண்டிக் கோலம் போட்டுவிடப் போகிருன், பார்” என்று பல்லேக் கடித்துக் கொள்வார். ★