பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ஆண்டவன் 135 கடைசியில் குழந்தை இறந்துவிட்டது. முத்துசாமி முதலியார் துக்கக் கடலில் ஆழ்ந்திருந்தார். யார் யாரோ துக்கம் கேட்க வந்தார்கள். பின்கட்டுக்காரரும் போனர். ஏதோ கேட்டார். அப்போதும் அவர் சும்மா இருக்க வில்லை. "டாக்டருக்கு இவ்வளவு செலவழித்தீர்கள். நான் சொன்னதை மாத்திரம் கேட்க உங்களுக்கு மனசு வரவில்லை” என்ருர். - அருகில் இருந்த பெரியவர் ஒருவர், "என்ன சொன் னிர்கள்?' என்று விசாரித்தார். அதை இப்போது சொல்லி என்ன பிரயோசனம்? நான் மண்டையை உடைத்துக்கொண்டேன், செந்திலாண் டவனுக்கு முடிந்து போடும் என்று. ஆயிரம் ஆயிரம் வருஷங் களாக ஜனங்களேக் கரையேற்றுவதற்காக ஆண்டவன்.அலே கொக்தளிக்கும் கடற்கரையில் கிற்கிருன். அவனே கினைத் தால் எல்லாம் தீர்ந்துவிடுமென்றேன். இவர் நம்பவில்லை." " அப்படியா' என்ருர் பெரியவர்; அவர் தெய் வத்தை உண்மையாக கம்புகிறவர். "உங்களுக்கு ஆண்டவன் அருமை தெரியும் போல் இருக்கிறது. இவர் என்னடா என்ருல், பழகியாண்ட வனுக்கு முடிந்து போட்டார். அப்போதே சொன்னேன் வேண்டாமென்று. இப்போது கண் முன்னே பார்க்கிருர் பலனே. எங்கள் ஆண்டவன் இப்படிக் கை விடுவான?” பெரியவருக்கு அந்தத் துக்கச் சூழலிலும் சிரிப்பு வந்தது. பழகியாண்டவன் ஒரு கட்சி; செந்திலாண் டவன் ஒரு கட்சி. பழநியாண்டவன் தீமை செய்பவன்; செந்திலாண்டவன் கன்மை செய்பவன்! அட! ஒரே தெய் வத்திலும் பிரிவினையா? பாழாய்ப் போன மனித உள். ளமே!’ என்றஎண்ணங்கள் அவர்உள்ளத்துடேஎழுந்தன. ஆனல் அவர் வாய், "அப்படியா!' என்ற வார்த்தை யைத் தான் வெளியிட்டது.