பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முதலும் 4.காலேஜில் படித்தாலே "நாணம்' என்பது போய்விடும் போல் இருக்கிறது. அத்தனை பேருக்கு நடுவில் நீ என்னைப் பார்த்துச் சிரித்தாயே; அது நியாயமா? மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள் வார்கள்? கல்யாணத்துக்கு இருக்கும் பெண்...” மேலே கமலா படிக்கவில்லை. முன்பே இரண்டு மூன்று முறை கடிதம் முழுவதையும் படித்துவிட்டாள். இன்னும் எத்தனை தடவை படிக்கப் போகிருளோ தெரி யாது. அவன் தேனில் தோய்த்து அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான, என்ன! அவள் இதழின் ஒரம் விண்டது. புன்னகை மெல்லத் தலைகாட்டியது. அது கியாயமா?' என்ற கேள்வியிலே அவள் கண் மறுபடியும் மறுபடியும் இடறியது. கண் இடறியதும் வாய் புன்முறுவல் பூத்தது. அவள் உள்ளத் தில் பழைய காட்சி விரிந்தது. אל "அவள் கன்ருகப் பிடில் வாசிப்பாள்" என்ருர் கமலாவின் அப்பா கோபாலேயர். . "காலேஜில் படிக்கிற பெண்களுக்குச் சங்கீதம் கற்றுக்கொள்ளக்கூட நேரம் கிடைக்கிறதா' என்று கேட்டார் வந்த பெரியவர். கமலாவைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்திருக்கிருர், கள். பதினறு வயசு கடந்து பதினேழாம் வயசில் அவள் கடமாடிக் கொண்டிருந்தாள். இண்டர் பரீட்சை எழுதி யிருக்கிருள். ச்ேசயமாக முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு வாள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவளுக்கு