பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முதலும் 137 என்னவோ மேலே படிக்கவேண்டுமென்று ஆசை. அவள் தகப்பருைக்கோ நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டுமென்ற எண்ணம். 'இவ்வளவு தூரம் படிக்க வைத்திருக்கிறீர்கள். இன் னும் இரண்டு வருஷங்கள் பொறுக்கக்கூடாதா? ஒரு வகை யாகப் பி. ஏ. பரீட்சையும் எழுதிவிடட்டுமே” என்று யாராவது சொல்வார்கள். - "இவள் பி. ஏ. பட்டம் பெற்று உத்தியோகத்துக்குப் போகப் போகிருளா என்ன? வீட்டில் சோம்பேறியாகப் பொழுது போக்குவதைவிட, காலேஜூக்குத்தான் போய் வரட்டுமே என்று அனுப்பினேன். ஆயிற்று, நல்ல இட மாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவிட்டால், அப்புறம் இவளுக்குச் சாமர்த்தியம் இருந்தால் பட்டத்தைப் பெற் றுக்கொள்ளட்டுமே!' - "வீட்டிலே இருந்து பி. ஏ. பட்டம் பெறமுடியுமா?" "அதைச் சொல்லவில்லை. நல்ல பெண் என்ற பட்டத் தைப் புருஷனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் பெறட் டும் என்று சொல்கிறேன்." - போம் ஐயா, சுத்தக் கர்நாடகமாக இருக்கிறீரேl' என்று நண்பர் அலுத்துக்கொள்வார். - х தகப்பனர் தம்முடைய கருத்தையே சாதிக்கப் பார்த் தார். கமலா தன் தந்தையின் விருப்பத்துக்குக் குறுக்கே கிற்கவில்லை. ஆகவே அவர் ஜாதகங்களே வாங்கிவந்தார்; பார்த்தார். ஜோசியர்களே காடி ஒடிஞர். நல்ல இடமாக ஒன்று தட்டுப்பட்டது. பையன் உதவி இஞ்சினியராக இருக்கிருன் இருபத்தைந்து வயசா கிறது. சொத்தும் இருக்கிறது. ஜாதகம் பொருந்தி யிருக்கிறது. மனிதர்களும் நல்ல குடும்பம் என்று தோன்றுகிறது. - -