பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வளைச் செட்டி அன்று அவர்கள் பெண் பார்க்க வந்திருந்தார்கள். பையன் பார்ப்பதற்கு லட்சணமாகவே இருந்தான். முகத் தில் சுறுசுறுப்பின் ஒளி தவழ்ந்தது. அவன் கண்கள் சதா துறுதுறுவென்று அலேந்துகொண்டே இருந்தன. அந்தக் கூடம் முழுவதையும். சில கணங்களில் பார்த்து விட்டன. 'முதலில் காபி கொண்டுவந்து வைக்கச் சொல். பிறகு பிடில் வாசிக்கலாம்" என்று கோபாலையர் சொன்னர். அவள் இரண்டு கைகளிலும் இரண்டு வெள்ளித் தட் டில் இனிப்புச் சிற்றுண்டியைக் கொண்டுவந்து வைத்தாள். மூன்ருவது மனிதர் ஒருவரும் இருந்தமையால் மற்ருெரு தட்டையும் வாங்கிக்கொண்டுவந்து வைத்தாள். அப்போது தான் அந்த கியாயம் இல்லாத காரியம் கடந்தது. அவள் அதிகமாக காணிக் கோணிக்கொண்டு கடக்க வில்லை, காலேஜில் பழகினவள் ஆகையால். ஆனல் வணக்க மின்றியும் நடக்கவில்லை. அவள் நடையில் கம்பீரம் இருங் தது. விநயமும் இருந்தது. கண்ணுல் அந்தப் பையனை நன்ருகப் பார்த்தாள்: ஆல்ை அவள் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை. இப்போது, அதாவது அங்கே வந்திருந்த மூன்ருவது பேர்வழியிடம் சிற்றுண்டித் தட்டை வைத்தபோது, அவள் கிமிர்ந்தே பார்த்துவிட்டாள். ஒரு கணம் பிரமிப் புத் தட்டியது. அடுத்த கணம் அவள் முகத்தை முறுவல் ஒளி செய்தது. அவனும் அவள் முகத்தைப் பார்த்தான்; நகை பூத்தான். o அவள் சரசரவென்று உள்ளே போய்விட்டாள். ഷ് புறம் பிடிலே வைத்துக்கொண்டு ஏதோ பாடினள். மறு படியும் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தாள். அந்த மூன்