பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வ&ளச் செட்டி "அன்றைக்கு எங்களுடன் வேருெரு பிள்ளையாண் டான் வந்தானே, அவன் ஐ. ஏ. எஸ். பரீட்சைக்குப் போயி ருக்கிருன். இப்போது ஏதோ வேலையில் இருக்கிருன். என் தங்கை பிள்ளை. நல்ல கெட்டிக்காரன். நானே அவன் ஜாதகத்தை வாங்கி உங்கள் குட்டியின் ஜாதகத்தோடு வைத்துப் பார்க்கச் சொன்னேன். மிகவும் உத்தமமாகப் பொருந்தியிருக்கிறதாம். இந்த மாதிரி இணைவது மிகவும் அருமை என்று ஜோசியர் சொன்னர்.” கோபாலேயருக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தம் பெண் விஷயத்தில் அவருக்கு உள்ள சிரத்தையை கினேந்துதான் ஆச்சரியப்பட்டார். "அப்படியா! கடவுளுடைய சித்தம் அப்படி இருக் தால் அப்படியே நடக்கட்டும். அந்தப் பிள்ளேயும் அவனேச் சேர்ந்தவர்களும் என் பெண்ணேப் பார்க்க வேண்டாமோ? 'அன்றைக்கே அந்தப் பையன் பார்த்துவிட்டான்: காங்களும் பார்த்தோம். அதுவே போதும். பெண்ணேப் பற்றி எல்லோருக்கும் திருப்திதான்” என்று அவர் சொன்னர். . . . மேலே ஏற்பாடுகள் கடந்தன. கமலா இதற்கு ஆட்சே பம் சொல்லவில்லை. கல்யாணம் சுபமாக நிறைவேறியது. இந்தக் காட்சிக ளெல்லாம் கமலாவின் மனக்கண் முன்னே ஓடின. மறுபடியும் அவள் இதழ்க் கோணத்திலே ஒரு புன் னகை அரும்பியது. கடிதத்தின் மேல் மீட்டும் கண் சென்றது. - ★ - “....காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்த வன் கொண்டுபோனன் என்ற கதையாகிவிட்டது கம்