பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வ8ளச் செட்டி நீ அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிருயா?" என்று கேட்டான். - 'அந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. இரண் டாம் தடவையாக நான் பிரமித்தேன். 'இதோ பார் சீனு; நீ அவளே எங்கே எப்படிச் சக் தித்தாய் என்றெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. அவள் உனக்காகவே பிறந்தவள் என்று எனக்குத் தோன்றிவிட்டது. ஆகவே, அவள் கழுத்தில் நீ தாலி கட்டும்படி ஏற்பாடு செய்யப் போகிறேன்” என்று சொல்லி என் முதுகைத் தட்டினன். தன் தகப்பனரிடம் என்ன சொன்னனே, ஏது சொன்னனே, அந்தப் பெரி யவரையே நேரில் அனுப்பி, கதா நாயகனை மாற்றிவிட ஏற்பாடு செய்தான். கல்யாணம் ஆனபிறகு என் அம் மாஞ்சியிடம் நான் சொன்ன சூத்திரத்திற்கு விளக்கம் கூறினேன். 'அவளைத் தெரியும்; ஆனல் தெரியாது” என்று சொன்னேனே, அதை விளக்கினேன்......" மறுபடியும் அவள் கண் மேலே படிக்காமல் கின்றது. பழைய கினேவு மறுபடியும் வந்தது. 长 அவள் தகப்பனர் உள்ளே வந்தார். " கமலா, பிடிவாதம் பிடிக்காதே. அந்தப் பெரியவர் இப்போது தான் வந்து போனர். அவருடைய பையனுக் கும் உனக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லையாம். ஆனல் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல ஒரு காரியம் கடந் திருக்கிறது. நீ என்ன சொல்கிருய்?" என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொன்னர். - ஐ.ஏ.எஸ்.ஸ்-க்குப் போயிருக்கிருரா?" என்று கமலா கேட்டாள். - -