பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வறைச்செட்டி ‘...... சினேக்க வினேக்க வேடிக்கையாக இருக்கிறது. நான் படிப்பை முடித்துவிட்டு ஐ. ஏ. எஸ். எழுதவேண்டு மென்ற எண்ணத்தோடு அது சம்பந்தமான விவரங்களை விசாரிக்க வந்திருந்தேன். திருச்சிராப்பள்ளியிலே இத்தனே கூட்டம் பஸ்ஸில் இல்லை. சென்னைப் பஸ் கூட்டம் மகா மோசம், கண்டக்டர்களுக்கு மட்டு மரியாதையே இல்லை. அன்று நான் மயிலாப்பூர் போய்விட்டு வந்துகொண்டி ருந்தேன். அப்போதுதான் அந்தச் சம்பவம் கடந்தது. உன்னுடைய சங்கடமான நிலையைக் கண்டபோது எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அத்தனே வீரர்கள் அந்தப் பஸ்ஸில் அமர்ந்திருந்தார்களே, ஒருவராவது உனக்கு உதவி செய்ய முன்வரவில்லையே! என்ன பட்ட ணம் இருத்யம் அற்ற பட்டணம் நான் உன்னே நன்ருகக் கவனித்தேன். டிக்கட் வாங் கின பிறகு நீ படும் அவஸ்தையையும் கண்டேன். நீ யார், உன் விலாசம் எது என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட் டேன். பட்டணம் போக்கிரிகள் ஏதாவது கதை கட்டி விடுவார்களே. ஆதலால் சும்மா இருந்தேன். ‘பஸ்ஸை விட்டு இறங்கின. பிறகுதான் நான் பண்ணி யது பைத்தியக்காரத்தனம் என்ற எண்ணம் வந்தது. இரண்டனக் கொடுத்தது அல்ல; உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளாமற் போனது. அந்த கிமிஷத்தில் நான் கோழையாகிவிட்டேன். அதுமுதல் என் மனத்தில் நீ குடிகொண்டு விட்டாய், உன்னே கினேப்பது தர்மமல்ல, சாத்தியமல்ல, அறிவல்ல என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும் ஏதோ ஒன்று என் மனசிலே அப்படி ஓர் உணர்ச்சியை உண்டாக்கி விட்டது. நான் கனவிலும் கனவிலும் உன்னே எண்ணி னேன். அதைப்பற்றி ஒரு காவியமே எழுதிவிடலாம்: