பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பும் வெல்லமும் அன்று வருஷப் பிறப்பு. கான் மாரிமங்கலத்தில் தங்கும்படி நேர்ந்துவிட்டது. வருஷத்துக்கு ஒரு நாளும் அதுவுமாக வெளியூரில் தங்குவதா? என்று அன்புடை யோர் கேட்பார்கள். ஒவ்வொரு நாளும் வருஷத்துக்கு ஒருநாள் தான் ; சித்திரா பெளர்ணமி, ஆடிப் பண்டிகை, திருவாதிரை, தீபாவளி, கார்த்திகை, தைப் பொங்கல் எல்லாமே வருஷத்துக்கு இரண்டு முறை வருவதில்லையே! அதுமட்டு மல்ல; கார்த்திகை மாதம் பதினெட்டாம் தேதி ஒரு விசேஷமும் இல்லாத நாள்; அது மாத்திரம் வரு ஷத்துக்கு ஒரு நாள் அல்லாமல் இரண்டு நாள் உண்டா? இன்னும் பார்க்கப் போனல் எந்த நாளும், கம் வாழ்க்கையி லேயே ஒரு நாள்தான்; திரும்பி வராத ஒரு நாள். கால மென்னும் பெருங்கடலில் ஒவ்வொரு கணமும், போனல் வராது. ஆகவே எந்த நாள்தான் அருமை இல்லாதது? ஏதோ விருந்து உணவும் வேடிக்கையும் உள்ள நாளே மாத் திரம், வருஷத்துக்கு ஒரு நாள்' என்று சொல்லு கிருர்கள். - அப்படிப்பட்ட ஒரு நாள் வரிசையில் ஒரு நாளாகிய, வருஷப்பிறப்பன்று கான் சொந்த ஊரில் இல்லாமல் மாரி மங்கலத்தில் இருந்தேன். அங்கே வருஷப்பிறப்பு நன்ரு. கத்தான் கழிந்தது. என்னுடைய நண்பன் பெரிய மிராசு தார். அவனுடைய வீட்டிலே இனிய விருந்துண்டேன். வருஷத்தின் முதல் நாள் என்ன அநுபவம் ஏற்படுகிறதோ அது வருஷ முழுவதுக்கும் கிடைக்கும் அநுபவத்தின் அறிகுறி என்ருல், அந்த வருஷத்துக்குத்தான் முதல்