பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பும் வெல்லமும் - 151 பரிசு கொடுக்கவேண்டும். அன்று நண்பன் நாராயணன் இட்ட விருந்து இருக்கட்டும்; அவன் சொன்ன கதை எப்படி இருந்தது! அதை நான் கன்ருக ரசித்தேன். ★ 'இதோ, இது என்ன தெரியுமா?" என்று கேட் டான் நாராயணன். o 'நானும் தமிழ்நாட்டான்தான் அப்பா. வருஷப் பிறப்புக்கு வேப்பம் பூப் பச்சடி பண்ணும் வழக்கம். எனக்குத் தெரியாதா என்ன?” வேப்பம் பூப் பச்சடி ஏன் செய்கிருர்கள்?" "மனிதனுடைய வாழ்க்கையில் இன்பமும் துன்ப மும் கலந்து கலக்தே வரும். அந்த இரண்டையும் சம மாகப் பாவித்து வாழவேண்டும். இந்தப் பச்சடியில் கசப் பும் இருக்கிறது; தித்திப்பும் இருக்கிறது. இந்த இரண் டும் வாழ்க்கையின் இயல்பைக் காட்டுகின்றன.' 'பேஷ்! அற்புதமான வியாக்கியானம்' என்று நாராயணன் சொல்லிக்கொண்டே அந்தப் பச்சடியை ஒரு விரலால் தொட்டு நாக்கில் வைத்துக்கொண்டான். 'இது வேம்படி வெல்லந்தானே?' என்று யாரையோ கேட் டான். "ஆமாம். பின்னே வேறு ஏதாவது போட லாமோ? என்று உள்ளேயிருந்து பதில் வந்தது. 'உன்னுடைய வியாக்கியானம் உலகத்துச் சமா சாரம். நான் ஒரு வியாக்கியானம் செய்யப்போகிறேன். அது எங்கள் குடும்பத்துச் சமாசாரம். வியாக்கியானம் என்ருல் நீ சொன்னதுபோன்ற தத்துவார்த்தம் அல்ல. இது ஒரு கதை; உண்மைக் கதை: வாழ்க்கையில் கடந்த கதை." * ,