பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வளைச் செட்டி நான் நாராயணன் முகத்தைப் பார்த்தேன். "ஆம், உண்மையாக எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த கதை. இந்தக் கதையின் நாயகர் எங்கள் பாட்டனர். இந்த வேப்பம் பூப் பச்சடி அந்தக் கதையின் தலைப்பு." "என்னப்பா புதிர் போடுகிருய்? வேப்பம் பூப் பச்சடி கதையின் தலைப்பாம்! தெளிவாகத்தான் சொல்” என்று அவனைக் கேட்டேன். . வேப்பம் பூப் பச்சடியில் வேம்பு இருக்கிறது; வெல் லம் இருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்தால் கதைக் குப் பெயராகிவிடும்.' வேம்பும் வெல்லமும்-அதுதானே?" "ஆமாம், அதுதான். வேம்பும் வெல்லமும் சேர்ந்து தான் கம் வாழ்க்கை என்று வியாக்கியானம் செய்தாயே; அந்த வியாக்கியானத்துக்கு விளக்கக் கதை இது." கான் பொறுமையை இழந்தேன். ' சரிதான், பீடிகை போதும்; கதையைச் சொல்லப்பா" என்று முடுக்கினேன். வேம்பும் வெல்லமும் ஆரம்பமாயிற்று. . אל எங்கள் தாத்தாவும் நாராயணன் என்னும் பெய ருடையவரே ஆல்ை அவர் வைகோடி காராயணராகப் பிறக்கவில்லை. இளமையிலே நடுவீதி நாராயணராகத்தான் இருந்தார். ஏழைக் குடும்பம்; அதிகப் படிப்பில்லே. ஆனல் சுறுசுறுப்பும் தடித்தனமும் அதிகமாக அவரிடம் இருந்தன. துணிவோ அபாரம். எதற்கும் அஞ்சாத வல்லாள கண்டர் அவர். . - . அன்று வருஷப்பிறப்பு. ஏழையானலும் வருஷத் துக்கு ஒரு நாளைக் கொண்டாடாமல் விடுவார்களா? 'தம்பி, இன்றைக்கு வேப்பம் பூ வேண்டும்" என்று வீட்டிலே சொன்னர்கள். தம்பி நாராயணன் புறப்பட்