பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பும் வெல்லமும் 158 டான். அவன் கினைத்தால் சாக்குச் சாக்காக வேப்பம் பூவை ஒடித்துக்கொண்டு வந்துவிடுவான். அன்றைக்கு அவனுடைய கெட்ட காலமோ, நல்ல காலத்தின் பால, காண்டமோ தெரியவில்லே, வேம்படியாள் கோவி லுக்குப் போய்ச் சேர்ந்தான். இந்த ஊரில் வயல் களுக்கிடையே ஒரு திடல் இருந்தது. மிகவும் சின்னத் திடல். அந்தத் திடலில் ஒரு வேப்பமரம். அதற்கடியில் தான் வேம்படியாள் என்னும் தெய்வம் கோவில்கொண் டிருந்தாள். கோவிலும் குளமும் இருந்தன என்று கினேக்காதே. சாமியை அங்கே கட்டிருந்தார்கள். வயல் களில் வேலே செய்கிறவர்கள் என்றைக்காவது அந்த வேம் படியாளுக்குப் பூசை போடுவார்கள். முரட்டுத் தம்பி நாராயணன் கேரே அந்தத் திடலுக் குப் போனுன். விடுவிடென்று வேம்படியாளுக்கு விதானமாகத் தழைத்திருந்த வேப்பமரத்தின் மேல் ஏறி ன்ை. கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த வேப்பம் பூவைப் பறிக்கும் காரியத்திலே முனைந்தான். - சிறிது நேரம் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தான். அதற்குள் ஏதோ சத்தம் அவன் காதில் விழுந்தது. வயல் வரப்பின்மேல் யாரோ கத்திகொண்டே ஓடிவந்தார்கள். - அடபாவி சமாய் ப் போகிறவனே!” என்ற வாழ்த்தொலிகள் அவன் காதில் விழுந்தன. ஒரு பக்கம் மாத்திரம் அல்ல; நாலு பக்கங்களிலும் கூச்சல் கிளம் பியது. சற்று நேரத்துக்குள் வயலில் வேலை செய்யும் ஹரி ஜனங்கள் காலந்துபேர் வேம்படிக்கு வந்துவிட்டார்கள். "ஏ புத்தியற்ற முட்டாளே! உனக்குப் பூ ஒடிக்க வேறே மரம் இல்லையோ?" என்று ஒருவன் கேட்டான். 'வேம்படியாள் உன் கண்ணேக் குத்திவிட மாட் :பாளோ?" என்ருன் ஒருவன்.