பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வளைச் செட்டி 'வேம்படியாள் கவனிக்கிறவரைக்கும் நாம் சும்மா இருப்பதா? பூவை ஒடித்த கையை ஒடித்து அடுப்பில் வைக்கவேண்டாமோ?” - 'இறங்கடா பயலே, இறங்கு!” "வருஷப்பிறப்பும் அதுவுமாக உனக்குப் புத்தி போயிற்றே!” 'தெய்வத்துக்குப் பயப்படாத பயல்கள் வேறு யாருக்குப் பயப்படப் போகிருர்கள்?" . . . இந்த வசவுகளையும் மிரட்டல்களேயும் கேட்டு ஜீரணிக்க நாராயணனுக்கு நேரம் இல்லை. அதற்குள்ளே வேம்படியாளின் பக்த ஜனங்கள் அவனேக் கீழே இழுத் துக் கிடத்தி அடி அடியென்று அடித்துவிட்டார்கள்: காறித் துப்பினர்கள். கொலே செய்யாமல் உயிரோடு விட்டுவிட்டார்கள். வேம்படியாள் முன்னே கினேவு தப் பிப்போய் நாராயணன் கிடந்தான். அவளுடைய அடி யார்கள் அவனே அப்படியே போட்டுவிட்டு வருஷப்பிறப் புக் கொண்டாடப் போய்விட்டார்கள். - 'முரட்டுப் பயல் பூவொடிக்கப் போனனே, வேறு எங்கே விளையாடப் போனனே? உதவாக்கரை!” என்று வீட்டிலுள்ளோர் எண்ணினர்கள். அவன் சாப் பாட்டுக்குக்கூட வரவில்லை. பிற்பகல் நெடுநேரம் கழித்து ாடக்கமுடியாமல் தட்டுத் தள்ளாடிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் நாராயணன். ★ அன்று முதல் என் பாட்டனர் வேறு பிறவி எடுத் தாரென்றே சொல்லவேண்டும். ஹரிஜனங்கள் அடித்த அடியிலிருந்து பிழைத்ததைச் சொல்லவில்லே. முரடராக வும் கருத்தில்லாத சோம்பேறியாகவும் பதினெட்டு வரு' ஷங்களைக் கழித்த நாராயணர் அன்று முதல் தம்முடைய