பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பும் வெல்லமும் 155 விளையாட்டுப் புத்தியை விட்டொழித்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தீவிரமான சங்கற்பம் அவர் உள்ளத்திலே பதிவாயிற்று. அது முதல் அவர் அதிக மாகப் பேசுவதில்லை. ஏதாவது வேலே பார்க்க வேண்டு மென்று அலைந்தார். கடைசியில் வேறு ஊர் ஒன்றில் ஒரு கடையில் சிற்ருளாக அமர்ந்தார். அவருடைய சங்கற்பம் உறுதிப்பட்டது. முதலாளி யிடம் நல்ல பேர் வாங்கினர். கடையில் விற்பனை சம்பந்த மான நெளிவு சுளிவுகளெல்லாம் தெரிந்துகொண்டார். சரக்குப் பிடிக்கிற நோக்கங்களையும் புரிந்து கொண்டார். 'நாராயணன் புத்திசாலி, கெட்டிக்காரன்; நாணயமுள்ள வன்” என்ற அபிப்பிராயம் கடை முதலாளி மனசில் உண்டாயிற்று. அதன் பயன், லாபத்தில் ஒரு பங்கு காரா யணருக்குக் கிடைத்தது. லக்ஷ்மீ கடாட்சம் விழுந்து விட் டால் பிறகு செல்வ வருவாய்க்குக் கேட்கவா வேண்டும்? முதலாளி உடம்பு தளர்ந்தது. அவர் பிள்ளைகள் கருத் துடையவர்களாக இல்லை. கடைசியில் நாராயணரிடமே கடையை ஒப்பித்துவிட்டுப் பரலோகத்தில் இடம் பிடிப் பதற்கு வேண்டிய காரியங்களில் ஈடுபட்டார் முதலாளி. நாராயணருக்கே கடையை அளித்துவிட்டார். ஏதோ பேருக்கு ஒரு சிறு தொகையைப் பெற்றுக் கொண்டார். அந்தப் புண்ணியவானுடைய நல்லெண்ணமும் எங்கள் பாட்டனரின் உழைப்பும் சேர்ந்துகொண்டன. கடை பிர பலமாயிற்று. பாட்டனர் கையில் முதல் சேர்ந்தது. தம்முடைய சொந்த ஊரில் கிலம் வாங்கவேண்டு மென்று அவர் கினைத்தார். அதோடு இந்த ஊரிலேயும் ஒரு கடையை ஆரம்பித்தார். அந்தக் கடையும் அமோக மாக வளர்ந்தது. அவர் முதல் முதலில் எந்த கிலத்தை வாங்கினர் தெரியுமா? வேம்படித் திடலும் ஒரு வயலும்