பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 19 வந்த பணத்தை யெல்லாம் எடுத்துக்கொண்டு மார்வார் போய் விட்டான். போகும்போது நாராயணனிடம் தொழிற்சாலையைக் கொடுத்து விட்டான். இப்போது காராயணன் தொழில் முதலாளி. - இவ்வளவும் சொல்லிவிட்டு, "எப்போது முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்?' என்று கேட்டான். மாமா சிரித்தார். 'இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார். - "என் மனசுக்குள் ஏதோ ஒன்று. அப்படிச் சொல் விக் கொண்டெ இருந்தது. என் வியாபார விஷயமாகச் சேலத்துக்கு ஒரு மாசத்துக்கு முன் வந்தேன். அப் பொழுது விசாரித்த போதும் உண்மை தெரியவந்தது.” கல்யாண ஏற்பாடுகள் நடை பெற்றன. நாராயணனே எல்லாவற்றையும் கவனித்துச் செய்தான். பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் போது கல்யாணம் சாமான்ய மாகவா இருக்கும்? . கல்யாணத்துக்கு முதல் நாள் ரங்கம் அத்தானிடம் ஒரு கேள்வி கேட்டாள்; 'அத்தான், நீங்கள் கண்ணுடித்" தொழிற்சாலை கடத்துகிறீர்களே அதில் வளைகளும் செய்வ துண்டோ?" என்று கேட்டாள். . "வளையல் இல்லாமலா? உயர்ந்த ரகமான வளையல் களைச் செய்கிருேம். உனக்கு மிகவும் சிறந்த வளைகள் கிடைக்கும். உன் கை அளவு தெரிந்திருக்தால் இப்போதே கொண்டு வந்திருப்பேன். ஆனால் இன்னும் சில மாசம் கழித்துத்தான் உனக்கு வளை போடவேண்டும்." "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"