பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 21 அன்று வளைகாப்பு. வளைச் செட்டி வந்திருந்தான். வழக்கம்போல் வந்திருந்த பெண்களெல்லாம் வளே அடுக்கிக் கொண்டார்கள். . ரங்கம் அம்மாவைக் கூப்பிட்டாள். 'அம்மா, அவர் தம்முடைய தொழிற்சாலையில் உயர்ந்த வளையல்களை எனக்காகவே பண்ணிக்கொண்டு வந்திருக்கிரு.ர். அவை களைப் போட வளைச் செட்டிக்குத் தெரியாது. தவிர எனக்கு ஒரு விரதம்; எனக்கு அவரே வளே அடுக்க வேணும்” என்ருள். - . 'ஒஹோ, அவருக்கு வளே உற்பத்தி பண்ணத்தான் தெரியும் என்று கினைத்தேன். வளை அடுக்கக் கூடத் தெரி யுமா?" என்று அம்மா சிரித்தாள். "சரி, நான் போட்டுக்கொண்டு வருகிறேன்' என்று உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டாள். - உள்ளே பட்டு ஜமுக்காளத்தில் வளையும் கையுமாக உட்கார்ந்திருந்தான், நாராயணன். அவள் அவன்முன் அமர்ந்தாள். அவன் மெல்ல மெல்ல வளைகளே அடுக் கின்ை. உருண்டு திரண்டிருந்த கைகளில் வளே அடுக்கு வது சுலபமாக இருந்தது. அவளுக்குத்தான் எத்தனை ஆனந்தம் - . "வாடா வளைச் செட்டி வந்திறங்கு திண்ண்ேயிலே" . என்று அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடினுள். - . 'வந்தேண்டி பூங்குயிலே வளையை உடைக்காதே' என்று அவன் எதிர்ப் பாட்டுப் பாடினன். அவள் அவனே நோக்கினுள். அந்தக் கண்ணில் நீர் கிறைந்திருந்தது. பழைய நினைவா? ஆனந்தமா? . . . "