பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரி 'கடவுளே, இன்னும் நீ என்னைச் சோதனை செய்ய வேண்டுமா? யார் யாரோ குழந்தைகள் இல்லை யென்று விரதம் இருந்தும் தல யாத்திரை செய்தும் வருந்துகிருர் கள். அவர்களுக்கு உன்னுடைய கருணையைக் காட்டா மல் இந்த ஏழைக்குக் குழந்தையின்மேல் குழந்தையைக் கொடுக்கிருயே!” என்று ஆடி வெள்ளிக்கிழமை யன்று விளக்கை ஏற்றி வைத்து முருகன் படத்தின் எதிரே கின்று சரோஜா மிகவும் பய பக்தியோடு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்போது கருவுற்றிருந்தாள். இன்னும் கான்கு மாதங்கள் போளுல் ஆணுே, பெண்ணுே பிறக்கும். முன்பே அவளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. கடைசிக் குழந்தைக்கு இரண்டு வயசு. - வருவாயுள்ள குடும்பமால்ை, "கொடிக்குக் காய் கனமா?' என்ற பழமொழியைக் காட்டி அவள் எண் ணம் தவறு என்று சொல்லலாம். அவளுடைய கணவன் ராமசாமிக்கு ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலை. ஒடி ஒடி ஒடாக உழைத்தாலும் எண்பது ரூபாய்க்கு மேல் ஒரு தம்படி வருவதில்லை. அதில் வீட்டுவாடகை பதினறு ரூபாய் போய்விடுகிறது. எஞ்சியுள்ள அறுபத்து கான்கு ரூபாய்களைக் கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டும். முதல் இரண்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகிருர்கள். இலவசப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்ருலோ, "குழந்தைகளின் கடத்தை கெட்டுவிடும் படிப்பு வராது".