பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. யா பாரி - 23. என்று எல்லோரும் சொன்னர்கள். ஆகவே அவர்களைச் சம்பளம் வாங்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். மாதம் பிறந்தால் அவர்களுக்குச் சம்பளம் கட்டியாக வேண்டும். குழந்தைகளுக்குப் பாலுந் தயிருமாகப் போட வழியில்லாத அவர்களுக்கு, வியாதி வந்தால் மருந்து வாங்கிக் கொடுக்காமல் முடியுமா? தர்ம ஆஸ்பத்திரியில் கூட மருந்தின் பெயரை எழுதிக் கொடுத்து விலக்கு வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விடுகிருர்கள். இந்த கிலேயில் வைத்தியத்துக்காக ஆகும் செலவு வேறு. கூடிய வரையில் வீட்டு விவகாரங்களில் தன் கண வனுக்கு ஒரு விதமான கவலையும் வைக்கக்கூடாது என்றே சரோஜா கினைத்தாள். அவர் ஒருவர் உழைத்து இத்தனே பேரும் சாப்பிட வேண்டியிருக்கிறது. கம்பெனி யில் அவர் உழைத்துச் சிரமப் படுகிருர் அ த ற் கே அவருக்கு எவ்வளவோ ஊட்டம் வேண்டும். இ ங் கே பாலாறு நெய்யாரு ஒடுகிறது? ஏதோ கிடைத்ததை வாயிலே போட்டுக்கொண்டு அவர் கம்பெனிக்கு ஒடுகிருர். இதன் நடுவில் உப்பு வாங்கி வா, மிளகாய் வாங்கிவா என்று நான் வேறு ஒட்டலாமா? நாலு நாள் அவர் படுத் துக் கொண்டால் எல்லோருக்குமே கஷ்டம் அல்லவா!' என்று சரோஜா பேசுவதைக் கேட்பவர்களுக்கு, 'இவள் இந்த நூற்ருண்டு வாசு கி யோ?" என்று எண்ணத் தோன்றும். - . ராமசாமிக்குத் தன் குடும்ப வாழ்க்கை சரோஜாவின் சாமர்த்தியத்தால் நடக்கிறதே ஒழியத் தன் சம்பாத்தியத் தால் கடக்கவில்லை என்பது கன்ருகத் தெரியும். கான்கா வது குழந்தை பிறக்கப் போகிறதென்ருல், உடனடியாகச் செலவுக்குப் பணம் வேண்டும் என்றுதானே அர்த்தம்? முன்பெல்லாம் அவசரமான, அவசியமான செலவு வந்து