பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வ&ளச் செட்டி விட்டால் சரோஜா தன் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்த சங்கிலியை எங்கேயாவது வைத்துப் பணம் வாங்குவாள். பிறகு எப்படியோ வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிக் கடனே அடைத்து விடுவாள். இப்போது அந்தச் சங்கிலி அவள் கழுத்தில் இல்லை. போன வருஷம் ராமசாமி டையாயிடு ஜுரத்தில் படுத்துவிட்டான். அதனுல் வீடே கலகலத்துப் போய்விட்டது. உதவிக்காக அவனுடைய சொந்தக்கார அம்மாள் ஒருத்தி வந்திருந்தாள். அந்தக் கண்டத்தினின்றும் அவன் தப்பினது சரோஜாவின் மாங் கல்ய பலங்தான் என்று ஊரே சொல்லிக் கொண்டது. அவன் நோயினின்றும் நீங்கி எழுந்தான். சரோஜாவின் கழுத்துச் சங்கிலியும் கைமாறிப் போய்விட்டது; அவள் அதை விற்று விட்டாள். ாான்காவது பிரசவத்துக்குப் ப ண ம் வேண்டுமே; எங்கே போவது? ராமசாமிக்கும் இந்தக் கவலை உண்டா யிற்று. சரோஜா அதிகக் கவலைப் படுபவளாகத் தோன்ரு விட்டாலும் அவளுக்கு உள்ளுற யோசனே இருந்து கொண்டுதான் இருந்தது. மூன்று குழங்தைகளையும் வீட் டிலே விட்டுவிட்டுப் பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போக வேண் டும். அப்போது வீட்டையும் அவளேயும் கவனிக்க யாரா வது சொந்தக்காரரை அழைத்து வரவேண்டும். வருகிறவர் களுக்குப் பட்டும் பட்டாவளியும் எடுத்துக் கொடுக்கப் போவதில்லை. வரப்போக வழிச் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டாமா? இப்படி ஒவ்வொன்ருகச் சேர்க் தால் ஐம்பது ரூபாய்க்குமேல் ஆகிவிடுமே! இதுவரைக்கும் திரும்பாத திசையில் ராமசாமியின் யோசனை திரும்பியது. அவனுடைய பெரியப்பாவின் பிள்ளை சிவகுமாரன் உள்ளூரிலே பெரிய வியாபாரி. எல் லோருக்கும் திடீரென்று அதிருஷ்டம் வங் து பணம்