பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி யா பாரி 25 குவிந்தது போல அவனுக்கும் குவிந்தது. உறவினர்கள் என்ருல் அவனுக்குக் கொஞ்சம் அபிமானம் இருந்தது. எதோ ஒரு சமயத்தில், "என் அப்பா ஊரானுக்கு உழைத் துத் தேய்கிருய் அந்தக் கம்பெனியிலே கொடுக்கிற சம்ப ளத்தை கான் கொடுக்கமாட்டேன? என்னிடமே வந்து விடேன்” என்று கூட அவன் ராமசாமியைக் கேட்டிருக் கிருன். லட்சம் வந்தாலும் சொந்தக்காரர்களிடம் வேலை செய்வது இளப்பமென்ற எண்ணத்தால் ராமசாமி அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. வாரத்துக்கு ஒரு முறையாவது ராமசாமி சிவகுமாரனப் போய்ப் பார்த்துவிட்டு வருவான். சிவ குமாரன் அவனே உபசரித்துச் சுமுகமாகப் பேசுவான். ஏராளமான லாபம் வந்ததல்ை அவன் குணம் ஒன்றும் மாறவில்லை. உலகத்தில் எல்லோரும் அப்படி இருக் கிருர்களா? அவனுடைய இந்த இயல்பைக் கண்டபோது ராமசாமிக்கு அவனிடத்தில் இருந்த மதிப்புப் பல மடங்கு உயர்ந்துவிட்டது. - இதுவரையில் சிவகுமாரனிடம் எந்த விதமான உதவி யையும் ராமசாமி பெற்றதில்லை. இப்போது அவனிடம் ஐம்பது ரூபாய் கடகை வாங்கினல் என்ன என்ற எண் ணம் அவனுக்கு உண்டாயிற்று. அதைச் சரோஜாவிடம் சொன்னன். அவளுக்குத் துக்கம் பிரிட்டுக்கொண்டு வந்தது. "இதுவரையில் நீங்கள் ஒரு மனிதரிடம் கேட்டு வாங்கி வழக்கம் இல்லை. இப்போது போய் யாசகம் செய் யும்படி ஆகிவிட்டது. எல்லாம் என்னுல்தானே?' என்று சொல்லிக் கண் கலங்கிள்ை. "என்ன இது, அசடாக இருக்கிருயே! கடன் கேட்டு வாங்கினல் அது யாசகம் ஆகிவிடுமா? உன்னல் வந்தது, என்னல் வந்தது என்று சொல்வது தவறு. கடவுளாகப்