பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வளைச் செட்டி பார்த்துச் செய்கிற காரியம் இது. நீ கவலைப்படாதே" என்று ராமசாமி ஆறுதல் கூறினன். 2 ராமசாமிக்கே ஆச்சரியம் தாங்கவில்லை; சிவகுமாரன் மறு மொழி ஒன்றும் பேசாமல் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டான். அப்போது அவனுக்கு, கேட்டது. தான் கேட்டோம்; நூறு ரூபாயாகக் கேட்காமல் போளுேமே!’ என்ற கினேவு தோன்றியது. மனிதனுடைய சபல புத்தி "இக்த ரூபாயை உனக்குச் செளகரியமான போது கொடுத்தால் போதும். உன் மனைவி பெற்றுப் பிழைத்து அந்தச் சங்கதியைச் சொன்னல் அதுவே பணத்தைத் திருப்பிக் கொடுத்ததற்குச் சமானம்' என்று சொன்னதைக் கேட்டபோது, மனுஷன் எவ்வளவு தங்க மானவன்!" என்று பட்டது. -- நல்ல வேளையாகச் சரோஜாவுக்குச் சுகப் பிரசவம் ஆயிற்று. ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியை முதல் முதலில் சிவகுமாரனிடம் வந்து சொன்னபோது அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். "நீ மிகவும் பாக்கிய சாலி” என்று பாராட்டினன். அப்படிச் சொன்ன போது அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. அதற்குக் காரணம் மாத்திரம் அப்போது ராமசாமிக்குத் தெரியவில்லை. - - - - - ராமசாமிக்கும் சிவகுமாரனுக்கும் வரவர நெருக்கம் அதிகமாயிற்று. ஒரு நாள் சிவகுமாரன் தன் மனைவியை யும் அழைத்துக்கொண்டுபோய் ராமசாமியின் இளங் குழந்தையைய் பார்த்துவந்தான். சிவகுமாரனுடைய மனேவி பங்கஜம் குழந்தையைப் பார்த்துவிட்டு, 'குழந்தை கிருஷ்ண விக்கிரகம் மாதிரி இருக்கிறது" என்று புகழ்ந்