பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ய ர பாரி 2? தாள். சரோஜா, "ஆம், கிருஷ்ணனும் ராமனுமாகத்தான் பிறக்கிருர்கள். இங்கே பிறந்து என்ன பிரயோசனம்? அரண்மனையிலே பிறக்கவேண்டியவர்கள் அவர்கள்” என்று அலுத்துக்கொண்டாள். . "ஏன் அம்மா அப்படிச் சொல்கிருய்' என்று பங்க ஜம் கேட்டாள். * "எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தாலே போதும். மேலும் மேலும் பிறந்தால் குடித்தனத்தைத் தாங்குவதே சிரமமாகப்போகிறது” என்று சரோஜா விளக்கம் கூறினுள். அதைக் கேட்ட பங்கஜம் பெருமூச்சு விட்டாள். * .. - . . . . . அவர்கள் இருவரும் குழந்தைக்கு வெள்ளிப் பாலோடை ஒன்றை அளித்துவிட்டுப் போனர்கள். "இவ்வளவு அன்பாக இருப்பார்கள் என்று கான் எதிர்பார்க்கவில்லை' என்று சரோஜா தன் கணவனிடம் கூறினள். - "குழந்தைகள் என்ருல் அவர்களுக்கு அளவற்ற ஆசை” என்ருன் ராமசாமி. - "அவர்களுக்கு எத்தனே குழந்தைகள்?' என்று கேட் டாள் சரோஜா. - . 'ஒரு குழந்தைகூட இல்லை. அவர்களோடு நெருங்கிப் பழகாதபோது அவர்களைப்போலப் பாக்கியசாலிகளே இல்லை என்றுதான் கினைத்திருந்தேன். பழகப் பழக அவர் களுக்குக் குழந்தை இல்லையென்று தெரிந்தது. அந்தக் குறையினல் புருஷனும் மனேவியும் படுகின்ற மனவேதனே சொல்லி முடியாது.' 'அதுதான் கான் குழந்தைகளைப்பற்றிப் பேசின. போது அந்த அம்மாள் பெருமூச்சு விட்டாளோ?"