பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வளைச் செட்டி "அவர்கூடக் குழந்தை என்று பேச்செடுத்தால் பெரு மூச்சு விடுகிரு.ர்.” "கடவுளுடைய சோதனையைப் பாருங்கள். வேண் டாம், வேண்டாம் என்கிற இடத்திலே இரண்டு மூன்று நான்கு என்று கொடுக்கிரு.ர். வேதனைப்பட்டுக்கொண் டிருப்பவர்களுக்கு ஒன்று கூடக் கொடுக்கிறதில்லை.” "அதைப்பற்றிப் பேச நமக்கு அதிகாரம் இல்லை. எல்லாம் தேவ ரகசியம்" என்று சொல்லிச் சிரித்தான் ராமசாமி. . ஒரு நாள் ராமசாமி சிவகுமாரனேச் சந்தித்தபோது பேச்சு வாக்கிலே சிவகுமாரன் கேட்டான்: 'ஏன் அப்பா, உன் மனைவி குழந்தைகள் கிறையப் பிறந்துவிட்டன. வென்று வேதனைப்பட்டுக்கொள்கிருளாமே! அன்று குழங் தையை காங்கள் பார்க்க வந்திருந்தபோது என் மனேவி யிடம் அலுத்துக்கொண்டு பேசிளைாம்." "இருக்கலாம். உடம்பு பலஹீனம் அடைகிறது. குடும்பமும் பெரிதாகி விடுகிறதல்லவா?” என்ருன் ராமசாமி. - "கொஞ்ச காலமாக எனக்கு ஒரு யோசனை தோன்றி யிருக்கிறது. அந்த விஷயத்தில் என் மனேவி அடிக்கடி தொந்தரவு கொடுக்கிருள். அதுவும், உங்கள் வீட்டுக் குப் போய்வந்ததிலிருந்து என்னத் துளைக்க ஆரம்பித்து விட்டாள்.' У . ت. . . "என்ன விஷயம்?" "சொல்லுகிறேன். இனிமேல் எங்களுக்குக் குழந்தை பிறக்காது என்பது நிச்சயம். கடவுள் பணத்தால் எங்களுக்குக் குறை வைக்காவிட்டாலும் இந்தப் பெரிய குறையை வைத்துவிட்டார். இயற்கையாக இந்தக் குறை சிறைவேற இடமில்லை. செயற்கையாக