பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ճ ա ր ւ « հ 29. அதை நிறைவேற்றிக் கொள்ளலாமா என்று தோன்று கிறது.” - ராமசாமிக்குச் சிவகுமாரன் கருத்துத் தெளிவாக விளங்கவில்லை. அவன் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தான். சிவகுமாரன் மேலும் சொல்லலாளுன்: 'உனக்கோ பல குழந்தைகள் பிறந்துவிட்டன என்று வேதனை. எனக்கோ ஒரு குழந்தை கூட இல்லையே என்று வேதனை. இந்த இரண்டு வேதனேக்கும் பொதுவாக ஒரு பரிகாரம் எனக்குத் தோன்றுகிறது. நீ எனக்குத் தம்பி தானே! அண்ணன் தம்பிகளின் குழந்தைகளே ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது நம்மவர்களில் வழக்கங்தான். இந்த ஏற்பாட்டால் உனக்கும் செளகரியம்; எனக்கும் சக் தோஷம். இதை உன்னிடம் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணும் போதெல்லாம் வாய் வரவில்லை. எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்று தைரியத்தை வருவித்துக் கொண்டு சொல்கிறேன். இப்போது பிறந்திருக்கிற குழந் தையைக் கண்டது முதல் என் மனேவி அதே ஞாபகமாக இருக்கிருள். உங்களிடம் சில காலம் பழகின குழந்தை கள் வேறு வீட்டில் வந்து இருப்பது கஷ்டமாக இருக் கலாம். இளங் குழந்தைக்கு அந்தத் தொந்தரவு இல்லை. இன்னும் சில காலம் கழித்துப் பால் மறந்த பிறகு இந்த ஏற்பாட்டை கிறைவேற்றலாம்." - ராமசாமிக்கு ஒ ன் று ம் தோன்றவில்லை. தன் குழந்தை ஒரு பணக்காரன் வீட்டில் அவனுடைய வாரி சாக வளரப் போவது அவனுக்குச் சம்மதங்தான். ஆளுல் குழந்தையை விலைக்கு விற்றதுபோல ஆகாதா? சரோஜா வின் மனசு எப்படி இருக்கிறதோ? - ராமசாமி மெளனமாக இருப்பதைப் பார்த்த சிவ. குமாரன் மறுபடியும் பேசலானன்: 'கன்ருக யோசித்துப்