பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி.ய பாரி 33 உலுக்கிவிடும். ராமசாமி மேலே பேசவில்லை. வெளியே போய்விட்டான். மறுவாரம் எப்படியோ ஐம்பது ரூபாயை அவன் கையில் சரோஜா கொடுத்து, 'இதை உங்கள் அண்ணு விடம் கொடுத்துவிட்டு வாருங்கள்” என்ருள். 'ஏது பணம்?” "அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன். இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள். பிறகுதான் எனக்குத் தூக்கம் வரும்" என்ருள் அவள். . அவன் சில நாட்களாகச் சிவகுமாரன் வீட்டுப் பக்கமே போகவில்லை. போனல் ஸ்வீகாரப் பேச்சு வருமே; அதற்காகத்தான். இப்போது போக வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது. - * .. 'வீட்டிலே கலந்து யோசித்தேன். அவள் இந்தக் குழந்தையிடத்தில் உயிராக இருக்கிருள். முதல் குழந்தை யினிடங் கூட இவ்வளவு ஆசையாக இருந்ததில்லை. அரைக் கணம் குழந்தையைக் கீழே விடுவதில்லை. அதனல்......... $ 3 'சரி, இஷ்டமில்லாவிட்டால் வற்புறுத்த வேண்டாம். நீங்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தபோது இப்படி ஒரு யோசனை தோன்றியது; சொன்னேன். குடும்பத்தில் வரவு செலவு சரிக்கட்டுவதற்கு எத்தனையோ பாடு பட வேண்டியிருக்கிறது. என் தம்பியென்றே அபிமானம் வைத்து விட்டமையால் இதைச் சொன்னேன். குடும்பக் கஷ்டத்துக்கு வேறு உதாரணமே வேண்டாம். நீ ஐம்பது ரூபாயைக் கடகை வாங்கினயே; அதைத் திருப்பிக் கொடுக்க முடிகிறதா? வேறு யாரிடமாவது வாங்கியிருக் தால் எவ்வளவு தடவை கேட்டிருப்பான்' ராமசாமி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பர்ஸை எடுத்து, 'உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக் வ-செ-3