பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வளைச் செட்டி கத்தான் வந்தேன். நீங்கள் செய்த உபகாரத்தை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்” என்று பணத்தை நீட்டினன். : சிவகுமாரனுக்கு மூஞ்சியில் அடித்தது போலாகி விட்டது. சிறிது நேரம் அவன் பிரமித்துப் போனன்; பிறகு சமாளித்துக் கொண்டான். "நான் உன்னைப் பணம் கேட்க வில்லையே! செளகரியப் பட்டபோது கொடுக்கலாம் என்றுதானே சொன்னேன்? என்ருன் அவன். செளகரியப்பட்டதால்தான் திருப்பிக் கொடுக் கிறேன்' என்று புன்னகை பூத்தபடியே ராமசாமி பதில் சொன்னன். . . அந்த ஐந்து கிமிஷ நேரத்தில் சிவகுமாரனுடைய வியாபார மனப்பான்மை புரிந்துவிட்டது. ஏதோ சிறிது நேரம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தான். - 4. சரோஜா இறந்துவிட்டாள். ஆம்; ஐந்தாவது பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தாள். ஏதோ கோளாறு வந்து குழந்தை வயிற்றிலே மாண்டு போயிற்று. டாக்டர்கள் என்ன சிரமப்பட்டும் சரோஜாவை மீட்க முடியவில்லை. . - கம்பெனி உண்டு, தான் உண்டு என்று இருந்த ராம சாமி இப்போது துணையில்லாதவனகி விட்டான். மாசங் தோறும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்ப தோடு சரி; மற்ற விஷயங்களில் அவன் அந்த வீட்டில் ஐந்தாவது குழந்தையாகவே இருந்தான். எந்த விதமான கவலையும் இல்லாமல் அவன் வாழ்ந்தான். இப்போது அவன் தலையில் பேரிடி விழுந்துவிட்டது. நான்கு