பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ய ர ட ரி 35 குழந்தைகளே அவன் தலையில் கட்டி விட்டு அந்த உத்தமி போய்ச் சேர்ந்துவிட்டாள். அவளுக்குச் சொர்க்கம் கிச்சய மாகக் கிடைக்கும். ஆனல் ராமசாமிக்கு இனி நரக வாழ்க் கையல்லவா ஆரம்பமாகிவிட்டது! தன்னைத் தானே கவனித்துக்கொள்ளத் தெரியாதவன் அவன். சட்டைக்குப் பொத்தான் இல்லையென்ருல் அவ னுக்குத் தெரியாது; அவள்தான் அதைத் தெரிந்து கொண்டு வாங்கிப் போடுவாள். அப்படி வாழ்ந்தவனுக்கு நாலு குழந்தைகளே வைத்துக் காப்பாற்றுவது எளிய காரியமா? மற்ருெரு கல்யாணம் செய்து கொள்ளலா மென்ருலோ அவனுக்கு வயசாகிவிட்டது. அன்றியும் சரோஜாவோடு வாழ்ந்த உள்ளம் வேறு யாரை ஏற்றுக் கொள்ளும்? சரோஜா இறந்த துக்கத்தை அவல்ை தாங்க முடியவில்லை. ஒரு மாதம் லீவு போட்டு விட்டான். குழங் தைகளை எப்படிக் காப்பாற்றுவது என்ற யோசனையிலே மூழ்கியிருந்தான். உறவினர்களில் வயசு சென்ற கிழவி ஒருத்தியை அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொள் வளலாம் என்ற யோசனை தோன்றியது. செலவுக்குக் கட்ட வேண்டுமே! அந்தக் கிழவி செட்டும் கட்டுமாக இருப் பாளா? மூன்ரும் பேருக்குத் தெரியாமல் காதோடு காது வைத்தாற் போல் குடித்தனத்தை எவ்வளவு கெளரவமாகச் சரோஜா நடத்தி வந்தாள்! அதை வினைக்க நினைக்க அவ னுக்கு வயிற்றில் என்னவோ வேதனே செய்தது. இப்படி மனசு குழம்புவதும், சிறிது தெளிந்து யோசனை செய்வதும், மறுபடி கலங்குவதுமாகப் பொழுது போய்க் கொண்டே இருந்தது. திடீரென்று பழைய கினேவு வந்தது. 'சிவகுமாரன் கண்ணனே ஸ்வீகாரம் செய்துகொள்ள விரும்பினனே. அப்போது சரோஜா இஷ்டப்படவில்லை. இப்போது அவனைப் போய்க் கேட்டால்..' இது நல்ல