பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வளைச் செட்டி யோசனையாகப் பட்டது. இரண்டு மூன்று நாட்கள் இந்த யோசனை அவன் மனசில் ஊறி உரம் பெற்றது. நான்கா வது நாள் செயலுருவம் அடைந்தது. - சிவகுமாரன் துக்கம் கேட்க வந்திருந்தான் முன்பு. இப்போது ராமசாமி அவனைத் தேடிச் சென்ருன். அவன் மறுபடியும் சரோஜா இறந்ததைப் பற்றியே பேசி ஆறுதல் கூறினன். ராமசாமி மெல்லத் தன் கருத்தைச் சொல்ல அடிப் போட்டான். சரோஜாவைப் போல உலகத்தில் பெண்ணைப் பார்க்க முடியாது. இனி எனக்கு என்ன வேண்டும்? இந்தக் குழந்தைகளைப் பற்றி எண்ணும் போதுதான் வயிறு பகீரென்கிறது. எப்படி நாலு குழந்தை களையும் வைத்துக் காப்பாற்றப் போகிறேனே, கடவுளுக் குத்தான் வெளிச்சம்' என்ருன். - "ஆமாம். கஷ்டங்தான். என்ன செய்வது? கடமை என்ற ஒன்று இருக்கிறதே, அதைச் செய்யத்தானே வேண்டும்?" - - ஒரு யோசனை எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வீட்டில் கண்ணனிடம் அதிக ஆசை என்று சொன்னிர்கள். அவனை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக ஓர் ஏற்பாடு கூட நடப்பதாக இருந்தது...” - - "ஒகோ, அதுவா? அதை இன்னும் நீ ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிருயா?” - "நீங்கள் எவ்வளவோ ஆசையாகக் கேட்டதை நான் மறப்பேன? உங்கள் ஆசை சிறைவேற வேண்டுமென்றே கடவுள் இப்படிச் செய்து விட்டாரோ, என்னவோ!' 'சே சே! பைத்தியம் மாதிரி பேசாதே. ஏதோ ஒரு நாள் பேசினோம். உன் மனேவி இறந்து போனது நான் அந்த விஷயத்தைப் பற்றிச் சொன்ன தல்ைதான் என்ரு சொல்ல வருகிருய்?" - -